மக்கள் காணிகளை ஊடறுத்து நிரந்தர வேலி அமைக்கும் விமானப்படை – ஏனையகாணிகள் விடுவிக்கப்படுமா ?

பிலாக்குடியிருப்பில் 40 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டநிலையில் அதற்கு அப்பாலுள்ள மக்கள் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளபோதும் அம் மக்களுடைய காணிகளை ஊடறுத்து விமானப்படையினர் நிரந்தர வேலிகளை அமைத்துவருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட காணிக அண்டிய பிரதேசத்தில் அடுத்தகட்டமாக விடுக்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்ட மக்கள் குடியிருக்கக்கூடியதாக உள்ள நிலப்பிரதேசங்களை ஊடறுத்து விமானப்படையினர் நிரந்தர வேலிகளை அமைத்துவருவதை மக்களும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக இன்றையதினம் (01)   காணிகையளிப்பினைச் செய்திசேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற ஊடகவியலாளர்களினால் விமானப்படையினர் நிரந்தர வேலிஅமைக்கும் புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com