மக்களுக்கு சுமையான வரி விதிப்பினை மேற்கொள்ளப்போவதில்லை

5163c3d5cad0ea192af9353b3106c862_Lசாதாரண பொது மக்களுக்கு சுமையாக அமையும் எந்தவொரு வரி விதிப்பும் மேற்கொள்ளப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.
வற் வரி திருத்தத்திற்கு அரசு தயாராவதாக அண்மையில் ஒருசில ஊடகங்கள் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் ஏழை பொது மக்களுக்கு இன்னல் தரும் எந்தவிதமான வரி அதிகரிப்பிற்கும் தான் இடமளிக்கப்போவதில்லையெனத் தெரிவித்தார்.

அவ்வாறான யோசனைகளை முன்வைக்கும் பொருளியல் நிபுணர்கள் இருப்பார்களாயின் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதை விடுத்து நாட்டின் பொருளியல் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கு தான் தயார் இல்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார். மலர்ந்த தமிழ், சிங்கள புதுவருடத்திற்காக புலத்திசிபுற மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு இன்று (18) முற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பொதுமக்களின் அரசாங்கம் என்ற ரீதியில் பொதுமக்களுக்கு கூடுதலான பொருளாதார நன்மைகளை வழங்கி அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தற்போதைய அரசின் கொள்கையாகுமென ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி

மக்கள் நேய அரசாங்கம் என்ற வகையில் முன்னோக்கி பயணித்த அரசு தொடர்ந்தும் முன்னோக்கிப் பயணிக்குமே தவிர பின்னோக்கி பயணம் செய்யாதென தெரிவித்தார். 2015 ஜனவரி 08 ஆம் திகதி இந்த நாட்டில் இடம்பெற்ற மாற்றத்தைத் தொடர்ந்து ஊழல், மோசடி, திருட்டு, சர்வாதிகாரம் போன்றே குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மக்கள் நேய அரசாங்கம் கட்டியெழுப்பப்பட்டதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, ஊழல், மோசடி, சன்டித்தனம், சர்வாதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சி என்பன காரணமாக நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச்சென்ற சக்திகள் மீண்டும் ஆட்சி செய்வதற்கு இடமளிக்காது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு உயர்ந்தபட்ச அர்ப்பணிப்பினை மேற்கொள்வதாக மலர்ந்த இப்புத்தாண்டில் தீர்க்கமாக தான் இவற்றைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த நாட்டை சிறந்த மற்றும் அபிவிருத்தி அடைந்த ஒரு நாடாக முன்னேற்றுவதற்கு புதிய அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் இவ்வேளையில், தோல்வியடைந்த ஒருசில அரசியல் சக்திகள் இன்னோரன்ன போலி முகங்களுடன் களத்தில் குதிப்பதாகவும் இப்போலி முகங்களை தன்னால் தெளிவாக இனங்காண முடிவதுடன் அரசியல் மன நோயாளர்களின் கூற்றுக்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்கள் அரசின் பயணத்திற்கு தடையாக அமையாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன் போது லக்தரு திரிய புலமைப்பரிசில்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார். வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிபால கம்லத், நாலக்க கொலொன்னே, சிட்னி ஜயரத்ன, ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான புலத்திசிபுற மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com