மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினையை ஆறுமாத காலப்பகுதிக்குள் முடித்துவைப்பேன் – யாழில் ஜனாதிபதி மைத்திரி உறுதியளிப்பு

யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து கடந்த 25 வருடங்களாக முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினையை எதிர்வரும் ஆறுமாத காலப்பகுதிக்குள் முடித்துவைப்பேன் என உறுதியளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கென உடனடியாக விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (20.12.2015) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச நத்தார் தினக்கொண்டாட்ட நிகழ்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது?
நான் இன்று நத்தார் கொண்டாட்டத்திற்காகவே யாழ்ப்பாணம் வந்தேன் ஆனால் அமைச்ர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் வேண்டுகோளின்பேரில் தெல்லிப்பளை முகாமிலுள்ள மக்களிற்கே தெரியாமல் அவர்களிது குடிசைகளைச் சென்று பார்வையிட்டேன். அவர்களின் குடிசைகளிற்குள் அவர்களின் சமையலறை வரை சென்று என்ன சமைக்கிறார்கள் என பார்த்து அவர்களின் நிலையினைப் பார்வையிட்டு இது விரைவாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என புரிந்துகொண்டேன்.
எனினும் கொழும்பிலுள்ள சில தீவிரவாதிகள் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளிற்கு முட்டுக்கட்டை இட முயற்சிக்கிறார்கள். நான் புலிகளை மீளுருவாக்கம் செய்ய ஒத்துளைப்பு நல்குவதாக கொழும்பிலுள்ள அறை ஒன்றில் இருந்தவாறு கதைக்கும் சிலர் ஊடகவியலாளர்களை அழைத்து கூட்டம் வைத்து கதைக்கிறார்கள். அவர்களிடம் நான் ஒரு விடையத்தை கூறவிரும்புகின்றேன். நீங்கள் யாழ்ப்பாணம் வந்து இந்த முகாம்களில் உள்ள மக்களைப் பாருங்கள். நீங்கள் வருவதற்காக வாகன ஏற்பாடும் பெற்றோல் செலவையும் நான் பெறுப்பேற்கின்றேன். நீங்கள் கடலடமார்க்கமா வருவதானால் கப்பல் ஒன்றினையும் விமானத்தில் யாழ்ப்பாணம் வருவதானால் விமானம் ஒன்றையும் ஏற்பாடு செய்து தருகின்றேன். இடம்பெயர்ந்து 25 வருடங்களாக முகாம்களில் துன்பப்படும் மக்களின் நிலையினை வந்து பார்வையிடுங்கள். 
யுத்தம் முடிவடைந்துவிட்டது பிரச்சிரனைக்கான தீர்வும் இன்னமும் எட்டப்படவில்லை என்பதை நான் புர்ந்துகொண்டுள்ளேன். ஆதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். யுத்தம் ஏன் தொடங்கியது என்பதற்கான காரணங்களை அறிவது அவசியமானது. அதற்கான பரிகாரங்களை நாம் ஏற்படுத்தவேண்டும். கூச்சல் கும்மாளமிட்டு சத்தம் இடுபவர்களிற்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். அனைவரும் நல்லிணக்கத்திற்காக ஒன்றுபடுங்கள்.
நுத்தார் திருநாள் அன்பும் கருணையும் செலுத்துகின்ற நாள். எமது நாட்டில் 7 சதவீதமான மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக உள்ளனர். இலங்கை மக்கள் அனைவரிடத்திலும் அன்பு காட்டவேண்டும். உலக மக்களிற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து அன்பும் கருணையும் மிக்க சமாதான செய்தியை வழங்குகின்றேன். அனைத்து மதங்களின் கோட்பாடுகளும் நல்லிணக்கத்தினைத்தான் வலியுறுத்துகின்றன. 
வடபகுதி மக்களும் தென்பகுதி மக்களும் சமாதனமாக வாழவேண்டும். இதற்காகவே இந்த விழாக்கூட யாழப்பாணத்தில் நடத்தப்படுகின்றது. வடபகுதி மக்களும் தென்பகுதி மக்களும் சமாதனமாக வாழ்வதாயின் நிரந்தர தீர்வு எட்டப்படவேண்டும். இதுதான் இலங்கை மக்களிற்கான நத்தார் செய்தி. சுமாதானம் நல்லிணக்கம் ஊடாக தீர்வினை எட்டமுடியும் என்பதை தற்போது புத்திஜீவிகளும் பொதுமக்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றைப் புரிந்துகொள்ள முடியாத சிலர் இருக்கிறார்கள். அவர்களை தீவிரவாதிகள் என்றுதான் கூறவேண்டும். இந்த நாட்டில் சுதந்திரமாக எழுதவும் கதைக்கவும் இந்த அரசு வழிகோலியிருக்கிறது. ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுவருகிறது. இதை தேசிய நல்லிணக்கத்திற்கானதாக பயன்படுத்தவேண்டும்.
இந்த நாட்டில் எனக்கு முக்கியமான இரு பணிகள் உள்ளன. ஓன்று சமாதனமான தீர்வினை எட்டுவது மற்றையது வறுமையை இல்லாதொழிப்பது. இந்த நாட்டை விரிவுபடுத்த நாம் 5 வருடங்கள்தான் கேட்டிருக்கின்றோம். 5 வருடங்களின் பின் நீங்கள் இந்த நாட்டை திரும்பி பார்க்கும்போது அதிசயிக்கத்தக்க நாடாக மாற்றுவோம் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com