மக்களின் மதம் , மொழி , பண்பாடு ,கலாசார அம்சங்களைச் சிதைப்பதும் இனி அழிப்புத்தான் – பத்மினி சிதம்பிரநாதன்

இன அழிப்பு என்பது வெறுமனே மக்களை  சுட்டுக்  கொல்வது  மட்டுமல்ல .அவர்களின் மதம் , மொழி , பண்பாடு ,கலாசாராம் ஆகியவற்றை  சிதைப்பதன் ஊடாகவும் இன அழிப்பு செய்ய முடியும்  என அராலி தெற்கு களவத்துறை விளையாட்டுக் கழகத்தின் 68 ஆவது  ஆண்டு  ஆடி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டு  உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்  தனது உரையில்,
  எமது  மக்கள் தொடர்ந்தும்  எம் மண்ணில்  பல்வேறு பிரச்சனைகளுக்கு சமூகச் சீரழிவுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். உண்மையில் ஒரு இனத்தினைச் சிதறடையச் செய்வதற்கு அவர்களது மொழி , மதம் , பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை  அழிப்பதன் ஊடாக அவர்களின் அடையாளங்களை  சிதைக்க முடியும் . அதற்கு நாம் சந்தர்ப்பங்களை  ஏற்படுத்த விடாமல்  விழிப்பாக இருக்க வேண்டும் .குறிப்பாக கலாசார சீரழிவுகள் , பண்பாட்டுப் புரள்வுகளில் இளைஞர்கள் யுவதிகள் , மாணவர்கள் சிக்குண்டு அல்லல் படாமல் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும் . அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்து  கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவைப் போன்று , போருக்குப் பின்னும் இதுவரை எத்தனையோ பெண்கள் , மாணவிகள் இவ்வாறான அவலங்களை  சந்தித்துள்ளனர் . 

இப்படி எம் தமிழ்ப் பிரதேசங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சம்பவங்களால் தங்கள் பெண் பிள்ளைகளை தனியே வெளியில்செல்ல அனுமதிக்க  முடியாத நிலையில் பெற்றோர்கள்  உள்ளனர் ,பாடசாலை வாசல்களில் போதைப் பொருள் உட்பட  சிறுவர்கள்  துஸ்பிரயோகம்  என்பனவும் அதிகரித்து  வருகின்றது ,இவை எல்லாம்  சேர்ந்தே எம் மக்களின் வாழ்வியலை  திட்டமிட்டு சீரழிக்கும் உத்திகளாக உள்ளன .

இன்றைய இளம் சமூகம்  சமூக வலைத் தளங்களுடனும் தொலைபேசி அழைப்புக்களுடனும்  தன் வாழ் நாட்களை இழந்து வருகின்றது , இதனால் எம் சமூகத்தின்  இளைஞர்களின் மனோ பாவங்கள்  பண்படுத்தப் படாத நிலையில்  பிறழ்வு மனப்பாங்குடன் வாழ தலைப்படுகின்றனர் ,  எனவே 
இவ்வாறான பண்பாட்டு , கலாசார ,விழாக்களின் ஊடாக சமூகக் கூட்டுணர்வும் ,  ஒற்றுமையும் பலமும் ஏற்படுவதன் ஊடாக எம் சமூக அடையாளங்களை பாதுகாக்க முடியும் .எமது பண்பாடு கலாசாரங்களை பாதுகாக்கும் வகையில் ஊர்தோறும் இவ்வாறான பண்பாட்டு நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற வேண்டும்  எனவும் கேட்டுக் கொண்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com