மக்களின் அபிமானத்தைப் பெற்ற தலைவர் ஓ.பன்னீர் செல்வமா? சசிகலாவா? – கருத்துக் கணிப்பால் பரபரப்பு

தமிழக அரசியல் நொடிக்கு நொடி பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கிறது. எம்.எல்.ஏ-க்களின் சொகுசு ரிசார்ட் அப்டேட்டுகள், ஓ.பன்னீர்செல்வத்தின் பத்திரிகையாளர் சந்திப்புகள், சசிகலாவின் திடீர் பேட்டிகள்… என தமிழக அரசியல் களம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த நொடி என்ன நடக்கும்? எந்த எம்.எல்.ஏ அணி மாறுவார்? என்கிற பரபரப்புகளுக்கு இடையே, அ.தி.மு.க தேர்தலில் வென்ற 134 தொகுதிகளில் ‘பன்னீர்செல்வம் Vs சசிகலா… 134 தொகுதிகளில் மக்கள் ஆதரவு யாருக்கு?’  என்ற தலைப்பில் தமிழக ஊடகமான விகடன் மக்கள் கருத்தறியும் கருத்துக் கணிப்பொன்றை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள குறித்த ஊடகம்  மக்கள் தங்கள் கருத்துகளை தொகுதி வாரியாகப் பதிவு செய்ததாகவும் தமிழகம் முழுவதும் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த கருத்துக் கணிப்பில் பங்குபற்றியதாகவும் தெரிவித்துள்ளது.

மக்களின் அபிமானத்தைப் பெற்ற தலைவர் ஓ.பன்னீர் செல்வமா? சசிகலாவா? என்ற கேள்விக்கான பதில் இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com