மக்களிடமிருந்து அன்னியப்படுகிறதா தமிழரசுக் கட்சி – இவ்வளவு பாதுகாப்பு யாருக்காக !

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் இன்று (11) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தையொட்டி பெருமளவு படையினர் விடுதியைச் சூழ உள்ள பிரதேசங்களில் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதி பிரதமரது வருகைகளின் போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறை போன்று விடுதியைச் சூழ உள்ள பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கைகள் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னராக இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னராக விடுதி மண்டபத்தினுள் புகுந்த படையினர் அங்கும் தேடுதல் நடாத்தியுள்ளனர். படையினர் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பூ வாஸ்களை எடுத்து பரிசோதிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.
அண்மைக் காலமாக மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் தமிழரசுக் கட்சியினர் மக்களிடமிருந்தான தங்கள் அன்னியமடைந்துவருவதன் அச்ச நிலமை காரணமாகவே இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com