மகிழ்ச்சிகரமான நாடுகளில் இலங்கை 117 ஆவது இடத்தில்!

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளில் இலங்கைக்கு 117 ஆவது இடம் கிடைத்துள்ளதாக இவ்வாண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.
சுமார் 156 நாடுகள் கலந்து கொண்ட இந்த மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இலங்கைக்கு அடுத்தபடியாக 118 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் Sustainable Development Solutions Network மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலைத் தயாரித்து அண்மையில் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக மகிழ்ச்சிகரமான தினத்தினை முன்னிட்டே இவ் அறிக்கை தயாரித்து வௌியிடப்பட்டுள்ளது.

தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைத் தெரிவு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றின் அடிப்படையிலே மகிழ்ச்சிகரமான நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது Sustainable Development Solutions Network.

இந்தப் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தையும், சுவிஸ்லாந்து இரண்டாம் இடத்தினையும், ஐஸ்லாந்து மூன்றாம் இடத்தினையும் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நோர்வே, பின்லாந்து, கனடா, நெதர்லாந்து,  நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, சுவீடன், இஸ்ரேல், ஒஸ்ரியா, அமெரிக்கா, கொஸ்ராரிக்கா, பீற்றா ரிக்கோ, ஜேர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.

இவ் நாடுகளின் கடைசி வரிசையில் ஆப்கானிஸ்தான், ரோகோ, சிரியா, புருன்டி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com