மகிந்தா வென்றால் மீண்டும் வெள்ளைவான் உறுமும் – ரணில்

(26.07.2015 ராஜபக்ஷ யுகம் மீண்டும் இந்நாட்டுக்கு வருமானால் எமது நாடு இருண்ட யுகத்துக்குள்ளேயே தள்ளப்படும். வெள்ளை வேன் கலாசாரம் தலை தூக்கும். இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் தலை தூக்கும். அப்படியானதொரு நிலைமை உருவாவதை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை. நாட்டு மக்களும் இதனை விரும்பமாட்டார்கள். எனவே நடைபெறவிருக்கும் தேர்தலில் மக்கள் புத்திசாலித்தனமாகச் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 
ஜனாதிபதி தேர்தலில் எமக்குக் கிடைக்கப் பெற்ற வெற்றி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் கிடைக்கும் என்றும் பிரதமர் இதன் போது நம்பிக்கை தெரிவித்தார்.
கண்டி தெல்தோட்டை நகரில்  இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
அங்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், லக் ஷ்மன் கிரியெல்ல கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், சமய குருக்கள் என பலதரப்பட்ட விருந்தினர்களும் கலந்து கொண்ட மேற்படி பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ராஜபக் ஷ வன்முறை ஆட்சிக்கு மீண்டும் நாம் துணை போவதா? எமது நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதா? எனக்கேட்கிறேன். அவ்வாறு மீண்டும் ராஜபக் ஷ யுகம் வருமாயின் வெள்ளைவேன் வரும். நாடு அபாய பாதையில் செல்லும். இன, மத பேரினவாதங்கள் தலைதூக்கும்.
இவ்வாறானதொரு நிலைமை இனியும் வரக்கூடாது. அதற்கு இடமளிக்கவும் கூடாது. இவற்றைப் புரிந்து மக்கள் அவதானத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து கண்டி மாவட்டத்தில் குறைந்த பட்சம் 09 ஆசனங்களையாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com