மகிந்தவை பிரதமராக்குங்கள் – சு.க. விற்குள் வலுக்கிறது ஆதரவு

தேசிய அரசைக் கலைத்துவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக அறிவிக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் பிரயோகித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்வதற்கு முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படும் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் உள்ளடங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாற்று அணியினரே இக் கோரிக்கையை ஜனாதிபதிக்கு விடுத்திருப்பதாக கூறப்படுகின்றது.
இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரி அணி, மகிந்த அணி, மாற்று அணி என மூன்றாக பிளவுபட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத் தேசிய அரசினால் எந்தப் பயனும் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கும் அவர்கள் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சியே நலன்களைப் பெற்றிருப்பதாகவும் அக்கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைப் பலவீனப்படுத்திவருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தமதுநிபந்தனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன்படாவிட்டால் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒப்படைத்துவிட்டு தாம் அனைவரும் மகிந்தராஜபக்சவுடன் இணந்துவிடப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
தற்போது கூட்டரசாங்கம் எனக் கூறப்பட்டாலும் தாங்கள் அமைச்சர்களாக இருந்தாலும் தாம் எதிர்க்கட்சியில் இருப்பது போன்ற ஒரு மன நிலையையே உணர்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள் இதனை விட ஜக்கிய தேசியக் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு தாங்கள் எதிர்க்கட்சியில் இருப்பது மேலானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com