மகிந்தவையும் துமிந்தவையும் பதவிநீக்க நடவடிக்கை

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் ஹிந்த அமரவீரவையும் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 4ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு
எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

குறித்த 16 உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது, இந்த பதவி நீக்கம் தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, இன்று மாலை நடைபெறவுள்ள சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போது இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுமாறு சுதந்திரக் கட்சியை வலியுறுத்தி வரும் குறித்த 16 பேரும், இன்றைய மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போது சுதந்திரக் கட்சியின் நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சிகளை மேற்கொள்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சி உடனடியாக தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகி, சக்திவாய்ந்த மக்கள் அமைப்பாக கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com