மகிந்தவின் மொட்டுடன் கைகோர்த்த சுரேஸின் சூரியனை வவுனியா வடக்கில் தமிழ்க்கூட்டமைப்பு தோற்கடித்தது

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ச.தணிகாசலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மூன்று ஆசனங்களை மட்டும் பெற்றிருந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெருமுனவுடன் கைகோர்த்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் மேலதிக வாக்குச் சீட்டினைக் கைப்பாற்றாத நிலையில் தோல்வியடைந்துள்ளார்.

பெரும் பரபரப்பிற்கு மத்தியில் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தேர்விற்கா வாக்கெடுப்பு இன்று (17) காலை 10 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக்நிறைஞ்சன் தலைமையில் ஆரம்பமானது.

வவுனியா வடக்கு பிரதேச சபை தலைவர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ச.தணிகாசலத்தின் பெயரும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஜெயரூபனின் பெயரும் முன்மொழியப்பட்டன.

உறுப்பினர்கள் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்புக் கோரிய நிலையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ச.தணிகாசலம் மற்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஜெ.ஜெயரூபன் ஆகியோர் சமமாக தலா 11 வாக்குகள் பெற்றதால் மேலதிக வாக்குச் சீட்டு எனன எழுதப்பட்ட சீட்டு ஒன்றும் வெறுமையாக ஒரு சீட்டும் குலுக்கப்பட்டு இருவரையும் ஒவ்வொன்றை எடுக்குமாறு கோரப்பட்டது.

மேலதிக வாக்குச் சீட்டைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ச.தணிகாசலம் வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 08 வாக்குகளுடன் அக்கட்சியின் ச.தணிகாசலத்துக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 வாக்குகளுடன் அக்கட்சியின் ஜெ.ஜெயரூபனுக்கு ஆதரவாக மகிந்தராஜபக்சவின் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 05 உறுப்பினர்களும்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 02 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வி.சஞ்சுதன், சிவரஞ்சினி ஜெயரூபன், தி.விஜிகரன் ஆகிய மூன்று உறுப்பினர்களுடன் சுயேட்சைக் குழுவின் அதிகாரகெதிரி நிமல் றோகனவும் வாக்கெடுப்பில் பங்குபற்றாது நடுநிலை வகித்தனர்.

 

இதேவேளை வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வில் இருவர் போட்டியிட்ட நிலையில் உப தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா. யோகராஜா 14 வாக்கு பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com