முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினர்களிடம் இருந்து சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட 30 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனை அறிக்கை ஒன்றின் மூலம் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ச கருத்துக் கூறுவதை ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்சவின் மேடை நாடகங்களுக்கு இனி இடமில்லை என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.