மகிந்தவின் மைத்துனர் கைது !

nadesan-nirupamaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்கை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  நிரூபமாவின் கணவரான திருக்குமரன் நடேசன் பொலிஸ் நிதி குற்றவிசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜரானார்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட அவரை பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி இதற்கு முன்னர் அவரது பெயரில் இருந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, அக்காணி பசில் ராஜபக்‌ஷவிற்கு சொந்தமானது எனவும் அதனை கொள்வனவு செய்து அரசாங்க பணத்தை மோசடி செய்து, சொகுசு வீடொன்றை கட்டி வருவதாக தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஆயினும் குறித்த காணிக்கும் தனக்கும் எவ்விதத்திலும் தொடர்பு இல்லை என, கடந்த வாரம் பூகொட நீதிமன்றில் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்திருந்ததை அடுத்து அக்காணியை பகிரங்க ஏலத்தில் விற்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds