மகாஜனக் கல்லூரி முதலிடம் – மாகாணக் கிண்ணத்தை யாழ் வலயம் சுவீகரித்தது

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழாவில் யாழ். கல்வி வலயம் கிண்ணம் வென்ற அதேவேளை பாடசாலை ரீதியில் ஆண்கள், பெண்கள் என இருபால் பிரிவுகளிலும் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 10ஆவதுவிளையாட்டு விழா யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகியது. இன்று திங்கட்கிழமை வரை போட்டிகள் நடைபெற்றன. இதில் யாழ் கல்வி வலயம் 650 புள்ளிகளைப் பெற்று கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.
மன்னார் கல்வி வலயம் 601 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் வலிகாமம் கல்வி வலயம் 545 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றன.

இதேவேளை போட்டிகளில் பாடசாலை ரீதியான முடிவுகளினடிப்படையில் ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவிலும் முதலிடத்தை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி தட்டிச்சென்றது.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி ஆண்கள் பிரிவில் 129 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 128 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்ற அதேவேளை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி 117 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றது.

பெண்கள் பிரிவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி  110 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும், சுண்டுக்குழி மகளிர் கல்லூரி 104 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தையும், அருணோதயாக் கல்லூரி 65 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com