மகள் வெட்டிக்கொலை – தாய் படுகாயம் – வடமராட்சி குடத்தனையில் கொடூரம்

வடமராட்சி, கிழக்கு அம்பன், குடத்தணையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றெருவர் வெட்டுக் கயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச்சம்பவம் இன்று (02) அதிகாலையில் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த வீட்டில் தாயும் மகளுமே தனியாக வசித்து வந்துள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

58 வயதுடைய நல்ல தம்பி தேவகி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 76 வயதுடைய நல்லம்பி செல்லம்மா படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையினை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com