மகசீன் சிறை கைதிகளும் உணவு தவிர்ப்பில்!

அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லை­யில் உணவு தவிர்ப்பு போராட்­டத்தை அர­சியல் கைதிகள் 28ஆவது நாளை தாண்டி தொடர்­கின்ற நிலை­யில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை முதல் புதிய மகசீன் சிறைச்­சா­லை­யி­லுள்ள அர­சியல் கைதி­களும் உணவு தவிர்ப்பு போராட்­டத்­தில் குதித்துள்­ளனர்.

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம் மற்றும் பொது அமைப்­புக்கள், அர­சியல் தரப்­புக்கள் முன்­னெ­டுத்­து­வரும் போராட்­டங்கள் மிகுந்த நம்­பிக்­கை­யினை தரு­வ­தாக தெரி­வித்­துள்ள அவர்கள்

இத்­த­கைய சூழலில் எமக்­காக போரா­டு­ப­வர்­க­ளுக்கு ஆத­ர­வாக எமது பக்க நியா­யத்தை சர்­வ­தேசம் புரிந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­தாக நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்­டத்தை ஆரம்­பிப்­ப­தாக அவர்கள் அறி­வித்­துள்­ளனர்.

இத­னி­டையே ஏற்­க­னவே யாழ்.பல்­க­லைக்­க­ழக சமூ­கத்­திற்கு அவர்கள் விடுத்த வேண்­டு­கோ­ளில் அர­சி­ய­லுக்கு அப்­பா­லான அகிம்சைக் குரல்­களை அவ்­வ­ளவு இல­குவில் யாராலும் அடக்­கி­வி­டவோ அலட்­சி­யப்­ப­டுத்­தவோ முடி­யாது என்ற உண்­மையின் அடிப்­ப­டையில் உங்கள் தூண்­டு­தல்­களால் எங்கள் விடு­தலை வாழ்வு துலங்­க­வேண்டும் என தடுப்புச் சிறைக்குள் இருந்து தாகம் கொள்­கின்றோம். அதற்கு எம் தமிழ் உற­வு­களின் கரங்கள் உங்­களை வலுப்­ப­டுத்தும் என நம்­பு­கின்றோம்.

8 முதல் 24 ஆண்­டு­க­ளாக இருள் வாழ்வில் மூழ்கிக் கிடக்கும் தமிழ் அர­சியல் கைதி­க­ளான எம்முள், “ 03 மரண தண்­டனைக் கைதி­களும் 08 ஆயுள் தண்­டனைக் கைதி­களும் 10 தொடக்கம் 200 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­களும் அதற்கு மேல­தி­க­மாக வழக்கு விசா­ர­ணை­களை எதிர்­நோக்­கிக்­கொண்­டி­ருக்கும் விளக்­க­ம­றியல் கைதி­க­ளுடன் சேர்த்து சுமார் 130 பேர் இலங்­கையின் பல்­வேறு சிறைச்­சா­லை­க­ளிலும் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ளோம்.

எமது நெடுங்­காலச் சிறை­யி­ருப்பு எமது குடும்­பத்­தி­னதும் பிள்­ளை­க­ளி­னதும் அன்­றா­டத்தை அழிவு நிலைக்குத் தள்ளி ஆண்­டுகள் பல கடந்­து­விட்­டன. சமூக, பொரு­ளா­தார, கலா­சாரப் பிரச்­சி­னைகள் அவர்­களைச் சீர­ழித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. உற­வு­களின் எல்­லை­யற்ற பிரிவு மனங்­களை உருக்­கு­லையச் செய்­கி­றது.

தமி­ழரின் அர­சியல் விடு­த­லைக்­கான “போராட்­டத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்கள்” என்ற கார­ணத்தைக் காட்டி சிறை­வைக்­கப்­பட்­டி­ருக்கும் நாம், ‘போர்க் கைதிகள்’ அல்­லது ‘அர­சியல் கைதிகள்’ என்­பதில் இரு­வேறு கருத்­துக்கள் இருக்­க­மு­டி­யாது. ஆகை­யினால், யுத்தம் ஓய்ந்து 08 வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில், அர­சாங்கம் நல்­லி­ணக்க அடிப்­ப­டையில் அர­சியல் தீர்­மானம் ஒன்றை எடுத்து அனைத்துத் தமிழ் அர­சியல் கைதி­க­ளையும் ஏதேனும் ஓர் பொறி­மு­றையின் ஊடாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

எமது இந்த நீதி நியாயமான கோரிக்கையை பலப்படுத்தி,அனைவரும் ஓரணியில் நின்று ஒருமித்துக் குரல் உயர்த்தி எமது விடுதலையை வலுப்படுத்த வேண்டும் என விநயமுடன் வேண்டுகோள் விடுக்கின்றோமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com