பௌத்த பீடங்­க­ளை­ ஒரு குழு தவ­றாக வழி­ந­டத்­து­கின்­றது!

மகா­நா­யக்க தேரர்­க­ளை­யும்- பௌத்த பீடங்­க­ளை­யும் ஒரு குழு தவ­றாக வழி­ந­டத்­து­கின்­றது, புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் அவர்­க­ளுக்குத் தவ­றான தக­வல்­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன என்று நேற்­றுத் தெரி­வித்­தார் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன.

நாங்­கள் அதி­கா­ரப் பகிர்வு என்ற கோட்­பாட்­டுக்கு அமைய பிள­வு­ப­டாத நாட்­டுக்­குள் தீர்­வைக் காண்­ப­தில் உறு­தி­யாக உள்­ளோம். நாங்­கள் அதி­கா­ரப் பகிர்வுக் கோட்­பாட்டை ஏற்­க­வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

தேசிய தீபா­வளி தின நிகழ்வு ஜனாதிபதி மாளி­கை­யில் நேற்­றி­ரவு நடை­பெற்­றது. இங்கு உரை­யாற்­றும்­போதே அரச தலை­வர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

புதிய அர­ச­மைப்­புத் தேவை­யில்லை. இந்த முயற்­சி­களை உட­ன­டி­யாக நிறுத்­த­வும். தற்­போது இருக்­கின்ற அர­ச­மைப்­பி­லும் திருத்­தங்­க­ளும் தேவை­யில்லை.

1978ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட – தற்­போது நடை­மு­றை­யில் இருக்­கின்ற அர­ச­மைப்பே அப்­ப­டியே தொட­ரட்­டும் என்று மல்­வத்த, அஸ்­கி­ரிய பீடங்­க­ளின் இணைந்த காரக மகா சங்க சபா உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அவர்­கள் தமது முடிவை நேற்று முன்­தி­னம் கூடி ஆராய்ந்த பின்­னர் வெளி­யிட்­டி­ருந்­த­னர். இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே  ஜனாதிபதி மைத்­தி­ரி­பால நேற்று இரவு நடை­பெற்ற நிகழ்­வில் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்­கில் ஒரு பகுதி மக்­கள் தென்­ப­குதி மக்­க­ளைத் துவே­சத்­து­டன் பார்க்­கின்­ற­னர். தெற்­கில் உள்ள ஒரு பகுதி மக்­க­ளும் வடக்கு மக்­களை துவே­சத்­து­டன் பார்க்­கின்­ற­னர். இந்த முரண்­பாடு களை­யப்­ப­ட­வேண்­டும்.

இன்று (நேற்று) வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளைச் சந்­தித்­தேன். அவர்­கள் முன்­வைத்த கோரிக்கை முக்­கி­யத்­து­வ­மா­னது. பேசு­வ­தன் ஊடா­கத் தீர்க்­க­லாம் என்று கூறி­னேன்.

தற்­போது வெளி­வந்­துள்ள இடைக்­கால அறிக்கை புதிய அர­ச­மைப்­பைத் தயா­ரிப்­ப­தற்­கான ஆரம்­பக்­கட்ட ஆவ­ணம். அத­னைப் பிரச்­சி­னைக்­கு­ரி­ய­தாக்­கு­வ­தில் அர்த்­த­மில்லை.

நான் வெளி­நாட்­டுக்­குப் பணிந்து அர­ச­மைப்­பைத் தயா­ரிப்­ப­தாக சிலர் குற்­றம் சுமத்­து­கின்­ற­னர். செல்வா பண்­டா-­ ஒப்­பந்­தம், செல்­வா-­டட்லி ஒப்­பந்­தங்­கள் கடந்த காலங்­க­ளில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவை எல்­லாம் வெளி­நாட்டு அழுத்­தத்­துக்கு அடி­ப­ணிந்தா மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பதை இங்கே கேட்க விரும்­பு­கின்­றேன்.  என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com