பௌத்த தர்­மத்­தின் மூலம் சாந்தி சமா­தா­னத்தை ஏற்படுத்த முடியும்!

அர­சமைப்பைக் கொண்டு செயற்­ப­டுத்­தும் சமா­தா­னத்தை விட பௌத்த தர்­மத்­தின் மூலம் சாந்தி சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்த முடி­யும் என வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்தார்.

புத்­தூர் மடிக்கே பஞ்ச ஹீத வித்­தி­யா­ல­யத்­தின் பொன்­விழா நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்துகொண்ட ஆளு­நர் புதிய நூல­கக் கட்டடத்­தைத் திறந்­து­ வைத்து உரை நிகழ்த்­தும்­போது மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

இந்த நாட்­டில் கடந்த காலங்­க­ளில் ஏற்­பட்ட கசப்­பான சம்­ப­வங்­கள் அனைத்­தை­யும் மறந்து அனை­வ­ருக்­கும் பொது மன்­னிப்பு வழங்கி புதிய பாதை­யில் பய­ணிக்க வேண்­டும். தன்னைக் கொல்­ல­வந்த நப­ருக்கே அரச தலை­வர் மைத்தி­ரி­பா­ல­சிறி சேன மன்­னிப்பு அளித்து விடு­தலை செய்­தி­ருக்­கின்றார்.

அதனை நாம் அனை­வ­ரும் பின்­பற்ற வேண்­டும். வெற்றி பெற்­று­விட்­டோம் என்ற இறு­மாப்­பைக் களைந்து பாதிக்­கப்­பட்ட மக்­கள் மனங்­களை வெல்ல இது­போன்ற முன்­னேற்ற கர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும்.
திரு­கோ­ண­ம­லை­ யி­லி­ருந்­தும் தென்­னி­லங்­கை­யிலிருந்­தும் பௌத்த குரு­மார்­கள் வடக்­குக்கு வந்து இது­போன்ற நல்­லி­ணக்­கப் பணி­களை முன்­னெடுப்பதை நான் மனப்­பூர்­வ­மாக வர­வேற்­கின்­றேன்.

அவர்­க­ளுக்கு எனது மனப்­பூர்­வ­மான வணக்­கங்கள். இந்த நாட்­டில் புத்த பெரு­மா­னின் போத­னை­யைக் கடை­ப்பி­டித்து ஒழு­கி­னால் நாட்­டில் சாந்தி சமா­தா­னம் ஏற்­பட்­டு­வி­டும் என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com