பௌத்தத்திற்கான முன்னுரிமையும் சிக்கல்களும்! – கே.நிருபா

 

Constitution. Illustration: Ratna Sagar Shrestha.THT

பௌத்தம் தொடர்­பான ஏற்­பா­டுகள் பற்றி புதிய அர­சி­ய­ல­மைப்பில் பிரச்­சினை கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை என சிங்­கள மக்­க­ளிடம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். இவ்­வாறு அவர் தெரி­வித்­த­தற்கும் அப்பால் சென்றுஇ தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் பௌத்­தத்­திற்­கான முன்­னு­ரி­மை­யினை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார். எனினும் தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு உட­ன­டி­யா­கவே பிர­த­மரின் இக் கருத்­தினை நிரா­க­ரித்­துள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிங்­கள மக்­க­ளி­டத்தில் சென்று இவ்­வாறு தெரி­வித்­தி­ருந்­த­போதும் இவ்­வி­டயம் தமிழ் மக்­க­ளையும் அவர்­க­ளது அர­சி­ய­லையும் சென்­ற­டை­வ­தற்குத் தாமதம் எடுக்­க­வில்லை. அர­சி­ய­ல­மைப்பு சகல இனங்­க­ளுக்கும் உரிய ஒன்று என்ற ரீதி­யிலும் தமிழ் மக்கள் அர­சியல் தீர்­வுக்­காக அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­தினை எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர் என்ற வகை­யிலும் அர­சாங்­கத்தின் இவ்­வா­றான கருத்­துக்கள் தமிழ்த் தரப்­புக்­க­ளி­டத்தில் விச­னத்­தினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. இது மட்­டு­மல்­லாமல் பிர­த­மரின் கருத்து தமிழ் மக்­க­ளி­டத்தில் நல்­லி­ணக்கம் தொடர்­பாக கொண்­டி­ருக்கும் சந்­தே­கங்­களை ஒரு­படி உயர்த்­து­வ­தா­கவும் உள்­ளது.

நாட்டில் காலத்­திற்குக் காலம் பதவி ஏற்ற அர­சாங்­கங்கள் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­போதும் இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய அர­சியல் தீர்­ வினை முன்­வைக்­க­வில்லை. இனப்­பி­ரச்­சி­னைக்­கான அடிப்­ப­டைக் ­கா­ர­ணங்­களை நிவர்த்­திக்­காது இனப்­பி­ரச்­சி­னைக்­கான அடிப்­ப­டைக்­கா­ர­ணங்­களால் தோற்றம் பெற்ற மோதல்­களைத் தீர்ப்­ப­தற்கு அல்­லது அடக்­கு­வ­தற்கே இனப்­பி­ரச்­சினைத் தீர்வு என முன்­னு­ரிமை வழங்கி வந்­தன. அவ்­வா­றா­னதோர் நிலைமை தான் இன்றும் நில­வு­கின்­றதா என்ற சந்­தேகம் தமிழ் மக்­க­ளி­டத்தில் கணி­ச­மாகக் காணப்­ப­டு­கின்­றது. அச் சந்­தே­கங்­க­ளுக்கு அர­சாங்­கத்தின் இவ்­வா­றான சம்­பா­ஷ­னைகள் வலுச்­சேர்ப்­ப­தா­கவும் அமை­கின்­றன.

சிங்­கள மக்­க­ளுக்கு ஏனைய இனங்­களைக் காட்­டிலும் அளிக்­கப்­பட்ட அரச அனு­ச­ர­ணை­களும் தமி­ழர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட இன

ரீ­தி­யி­லான மற்றும் மத ரீதி­யி­லான பார­பட்­சங்­களும் இனப்­பி­ரச்­சி­னையில் முக்­கிய இடம் வகிக்­கின்­றன. இவ்­வாறு நிலை­மைகள் காணப்­ப­டு­கையில்இ நாட்டில் உள்ள சகல இனத்­த­வர்­களும் இலங்­கையர் என்ற அடிப்­ப­டைக்குள் வர­வேண்­டு­மாயின் சக­லரும் சம­மாக மதிக்­கப்­ப­டத்­தக்க அர­சி­ய­ல­மைப்பும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­த­லுக்­கு­மான அவ­சி­ய­முமே நாட்­டிற்கு அவ­சி­ய­மா­னது என்­ப­தனை யாராலும் மறுக்க முடி­யாது.

நடை­மு­றையில் உள்ள இலங்­கையின் இரண்டாம் குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பில் பௌத்த மதத்­திற்கு முதன்­மைத்­தானம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை பௌத்த சாச­னத்­தினை பேணி வளர்த்­தலும் பேணிப்பாதுகாத்­தலும் அரசின் கட­மை­யாக இருத்தல் வேண்டும் எனவும் நடை­மு­றையில் உள்ள யாப்பு தெரி­விக்­கின்­றது.ranil

நாட்டில் பல்­லி­னங்­களும் பல் மதங்­களும் பூர்­வீகக் குடி­க­ளாக வாழு­கின்ற நிலையில் குறிப்­பிட்ட ஓர் இனத்­தி­னதோ மதத்­தி­னதோ அடை­யா­ளங்­களை மாத்­திரம் அர­சாங்­கத்தின் விசேட கரி­ச­னைக்கு உட்­ப­டுத்­து­வது நல்­லி­ணக்­கத்­திற்­கான உத்­தி­யாக அமை­யாது. கடந்த காலங்­களில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அர­சாங்­கத்தின் போக்­கு­களில் பௌத்த சிங்­கள மய­மாக்கம் ஓர் முக்­கிய இடத்­தினைப் பிடிக்­கின்­றது.

தமிழ் மக்­களின் பூர்­வீக நிலங்­களில் பௌத்த விகா­ரைகள் அமைக்­கப்­ப­டு­வதை தமிழ் மக்கள் எதிர்க்­கின்­றனர். தமிழ் மக்கள் பௌத்த விகா­ரைகள் அமைக்­கப்­ப­டு­வதை இன­வா­தத்தின் அடிப்­ப­டை­யிலோ அல்­லது மத­வா­தத்தின் அடிப்­ப­டை­யிலோ எதிர்க்­க­வில்லை. வர­லாற்று ரீதி­யாக பௌத்த விகா­ரைகள் அமைக்­கப்­பட்டு அவற்­றுக்கு இருக்­கின்ற அரச அங்­கீ­காரம் மற்றும் ஆயுதப் போராட்டம் ஆரம்­ப­மான பின்னர் காணப்­ப­டு­கின்ற இரா­ணுவ ­ரீ­தி­யி­லான அனு­ச­ர­ணைகள் போன்­ற­வற்றின் மத்­தியில் தமி­ழர்­க­ளு­டைய அடை­யா­ளங்­களைக் காப்­பாற்­றிக்­கொள்ள முடி­யாது என்­ப­தனை கற்­றுக்­கொண்­ட­த­னா­லேயே தமிழ் மக்கள் பௌத்த விகா­ரைகள் அமைக்­கப்­ப­டு­வதை எதிர்க்­கின்­றனர்.

தமிழ் மக்­களின் இனரீ­தி­யி­லான அடை­யா­ளங்­க­ளையும் பண்­பாட்­டையும் தொன்­மை­யையும் வர­லாற்­றையும் இருப்­பி­னையும் மறுக்­கின்ற வகை­யி­லேயே வடக்கு கிழக்கில் பௌத்த சிங்­கள மய­மாக்கம் நடை­பெ­று­கின்­றது. தமிழ் மக்­களில் கணி­ச­மா­னோ­ருக்கு புத்த பிரானின் போத­னை­களில் மதிப்பும் நம்­பிக் ­கையும் உண்டு. எனினும் பௌத்த விகா­ரை கள் அமைக்­கப்­ப­டு­வதை தமிழ் மக்கள் எதிர் க்­கின்­றனராயின் பௌத்­தத்­திற்­குள்­ளாக வடக் குக் கிழக்கில் மேற்­கொள்­ளப்­படும் அர­சியல் கார­ண­மா­கவே ஆகும். தமிழ் மக்கள் பூர்­வீ­க­மாக வாழும் பகு­தி­களில் அர­சியல் ரீதியில் பௌத்த கோயில்கள் ஆக்­கி­ர­மிப்பின் உத்­தி­யாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றமை தமி­ழர்­க­ளி­டத்தில் பௌத்­தத்­தினை வடக்குக் கிழக்கில் ஏற்க முடி­யா­த­தற்­கான கார­ண­மா­க­வுள்­ளது.

இலங்கை அர­சி­யலும் பௌத்த சிங்­க­ளமும் ஒன்­றுடன் ஒன்று இணைந்­த­தாக மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்­களால் சட்­டரீ­தி­யிலும் சட்­டத்­திற்குப் புறம்­பா­கவும் பேணப்­பட்­டுள்­ளன. இது ஏனைய இனங்­களை தாய்­நாட்­டிற்­குள்­ளேயே அந்­நி­யப்­ப­டுத்­து­வ­தா­க­வுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­த­ர­ணியும் அர­சி­ய­ல­மைப்­பினைத் தயா­ரித்­து­வரும் பிர­தான வழி­ந­டத்தல் குழுவின் அங்­கத்­தவ­ரு­மான பரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்­னவும் அண்­மையில் அர­சி­ய­ல­மைப்பில் பௌத்­தத்­திற்கு அளிக்­கப்­படும் இடம் குறித்து கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார்.sumanthiran-mp

அதில் அவர் இலங்­கையின் பிர­தான மத­மாக பௌத்­த­மதம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­போதும்

அரச மத­மாக பௌத்தம் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்றார். பாகிஸ்தான்இ மற்றும் சவூதி அரே­பியா போன்ற நாடு­களில் அரச மத­மாக இஸ்லாம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது போன்று இலங்­கையில் இல்லை என்­பதை தெரி­வித்தார். அவரும் இது­வ­ரையில் பௌத்தம் எவ்­வாறு முன்­னு­ரிமைப் படுத்­தப்­பட்­டி­ருந்­ததோ அதே­போன்று தொடர்ந்தும் முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­படும் என்றே கூறினார். இவற்­றி­லி­ருந்து அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­துடன் தொடர்பு பட்ட பெரும்­பான்­மையோர் இடது சாரி­க­ளாக இருந்­தா­லேன்ன வலது சாரி­க­ளாக இருந்­தா­லேன்ன நடை­மு­றையில் அரசில் காணப்­படும் பௌத்­தத்­திற்­கான முன்­னு­ரி­மை­யினைத் துறக்க விரும்­பு­கின்­றனர் இல்லை என்­பது தெளி­வா­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஏனைய இனங்­க­ளி­டத்தில் எதா­வது ஒரு­வகைத் திருப்­திப்­ப­டுத்­தல்­களின் ஊடாக பௌத்­தத்­திற்­கான முன்­னி­லைப்­ப­டுத்­த­லையே விரும்­பு­கின்­றனர் என்­பது புல­னா­கின்­றது.

பௌத்­த­மதம் இலங்­கையின் பிர­தான மத­மாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் அரச மத­மாகக் காணப்­ப­ட­வில்லை என்­பது அர­சி­ய­ல­மைப்புச் சட்ட ரீதி­யிலும் சட்ட விவா­தங்­களின் அடிப்­ப­டை­யிலும் சரி­யா­ன­தாக அமை­கின்­றது. ஆனால்இ நடை­முறை ரீதியில் பௌத்­தமே இலங்­கையின் அரச மத­மாக பேணப்­ப­டு­கின்­றது என்­ப­தனை நாட்டு மக்­களால் சாதா­ர­ண­மா­கவே கண்­டு­கொள்­ளவும் உண­ரவும் முடி­கின்­றது. இதனால் கணி­ச­மா­ன­ளவு ஏனைய மதத்­த­வர்கள் பார­பட்சம் காட்­டப்­ப­டு­கின்­றனர் என்­பது யதார்த்­த­மாகும்.jayampathi

மத­சார்­பற்ற அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டு­வது பல்­லி­னங்­க­ளையும் அங்­கீ­க­ரிக்­கின்ற மனிதத் தன்மை மிக்க ஓர் முற்­போக்­கான நட­வ­டிக்­கை­யாகும். ஆர­சாங்­கத்­தினைப் பொறுத்­த­ளவில் நடை­மு­றையில் இருந்­து­வந்த பௌத்­தத்­திற்கு முன்­னு­ரிமை அளித்தல் என்னும் கொள்­கை­யினை மாற்றி மத­சார்­பற்ற ஓர் அர­சினை ஸ்தாபிக்கும் போது பௌத்த சிங்­க­ள­வர்­களில் பிற்­போக்­கான சிந்­த­னை­யு­டை­ய­வர்கள் எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தக்­கூடும். அது நடை­மு­றையில் உள்ள அர­சாங்­கத்­திற்கு சிக்கல் மிக்­க­தா­கவும் அமையும். எனினும் யதார்த்­தத்தில் நாடு நல்­லி­ணக்­கத்­தினை நேக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­ற­தாயின் நல்­லி­ணக்­கத்­திற்­கான அர்ப்­ப­ணிப்பும் விட்­டுக்­கொ­டுப்பும் அவ­சி­ய­மாகும் என்­பதை சிங்­கள மக்கள் உண­ர­வேண்­டி­யுள்­ளது. அல்­லது உணர்த்­தப்­ப­ட­வேண்டும். இதனை விடுத்து நாடு முன்­னோக்கி பய­ணிக்க முடி­யாது.

பௌத்­தத்­திற்கு முத­லிடம் என்ற கொள்­கை­யினை ஆட்­சி­யா­ளர்கள் கைவிட வேண்டும் என்று தமிழ்த் தரப்­புக்கள் கோரி­வ­ரு­கின்­றன. நாட்டில் சக­ல­ருக்கும் சம உரிமை என்று கூறும் அர­சி­ய­ல­மைப்பில் ஒரு மதத்­திற்கு முன்­னு­ரிமை கொடுப்­பது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது. நல்­லி­ணக்­கத்­திற்குப் பாதிப்­பாக அமையும் என்­பதை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அர­சி­ய­ல­மைப்­புக்­கு­ழுவில் அங்­கத்­துவம் வகிப்­ப­வ­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். மதச்­சார்­பற்ற அர­சா­கவே நாடு இருக்க வேண்டும். என தமிழ்த் தரப்­புக்கள் விரும்­பு­கின்­றன.

தமி­ழர்கள் தமது மதத்­தினை முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தக்­கோ­ர­வில்லை. ஆனால் வேறு ஒரு மதம் மட்டும் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும் விரும்­ப­வில்லை. பௌத்தம் முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வது என்­பது இலங்­கை­யினை பௌத்த நாடாக மாற்றும் நகர்­வு­க­ளுக்கு வலுச்­சேர்ப்­ப­தாக அமை­கின்­றது என்­ப­தனை தமிழ் மக்கள் கண்­டு­வந்­தி­ருக்­கின்­றனர். எனவே எதிர்­வரும் காலங்­களில் அர­சி­ய­ல­மைப்புக் குழுவில் தர்க்­கத்­திற்கு உரிய விட­ய­மா­கவும் இது அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் சிங்கள மக்கள் அரசியலமைப்பில் மதரீதியில் கொள்கையினை நீக்கி மதச்சார்பற்ற நிலைக்குச் செல்வதை ஏற்றுக்கொள்ள மட்டார்கள் என்ற போக்கு நிலவுகின்றதாயின் நல்லிணக்கத்திற்கான சிங்கள மக்களின் நிலைப்பாடு தொடர்பில் கேள்வி எழுகின்றது. நல்லிணக்கத்திற்கான தேவைப்பாடுகளை சிங்கள மக்களும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சமமாக அணுகவும் அர்ப்பணிக்கவும் வேண்டியுள்ளது.

நல்லிணக்கம் என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரம் அவசியமானதல்ல. சகல இனங்களுக்கும் நலன்களைத் தரக்கூடியதாகும். இந் நிலையில் தமிழ் மக்கள் பௌத்தத்திற்கு அளிக்கப்படும் முன்னுரிமையினால் நல்லிணக்கத்திற்குப் பங்கமுள்ளது என நியாயபூர்வமாகத் தெரிவிக்கையில் அவ்வாறு மேற்கொள்வதனால் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த முடியாது. ஆகவே இவ்விடயத்தில் தமிழ் மக்கள் பொறுமை காத்துப் பயணிக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் கருதினால் அது எல்லாவற்றினையும் தமிழ் மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் அல்லது சகித்துக் கொள்ள வேண்டும் என்பதாக அமைந்துவிடும். அது நல்லிணக்கமல்ல. எனவே சகல இனங்களையும் பாதிக்காத மதச்சார்பற்ற ஓர் முற்போக்கான நிலைமையினை நாடிச் செல்வதுதான் காத்திரமான நல்லிணக்கத்திற்கு மிக அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com