போர் விமானங்களை கொள்ளவனவு செய்ய இலங்கை விமானப்படை திட்டம்!

இலங்கை விமா­னப்­ப­டைக்கு புதி­தாக நவீ­ன­ரக விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய அமைச்­ச­ர­வையின் அனு­மதி கோரப்­பட்­டுள்­ளது. எனினும் புதிய விமா­னங்­களை வாங்க விமா­னப்­படை விசேட கோரிக்­கை­களை முன்­வைக்­க­வில்லை என விமா­னப்­படை தெரி­வித்­துள்­ளது.

இலங்கை விமா­னப்­ப­டைக்கு புதி­தாக 18 விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்ள நிலையில் இது குறித்து விமா­னப்­படை ஊட­கப்­பேச்­சாளர் கிஹான் சென­வி­ரத்­ன­விடம் வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

இலங்கை விமா­னப்­படை வரு­டாந்தம் தமது விமா­னங்கள் தொடர்­பி­லான அறிக்­கை­யினை பாது­காப்பு அமைச்­சிற்கு சமர்ப்­பிப்­பது வழ­மை­யான ஒன்­றாகும். பழைய விமா­னங்­களை திருத்­தவும் தேவைப்­படும் பட்­சத்தில் புதிய விமா­னங்­களை வாங்­கவும் நாம் எமது தரப்பில் அறிக்கை வழங்­குவோம். எனினும் அவ­ச­ர­மாக 18 விமா­னங்­களை கொள்­வ­னவு செய்­ய­வேண்டும் என விமா­னப்­படை ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. அதற்­கான அவ­சியம் இப்­போது இல்லை. பழு­த­டைந்­துள்ள சில விமா­னங்­களை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்­ளது. அதேபோல் பழைய விமா­னங்­களை புதுப்­பிக்க வேண்டும். அதற்­கான தேவைகள் உள்­ளன.

அமைச்­ச­ர­வையில் இந்த விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. எனினும் உறு­தி­யாக எம்மால் இந்த விட­யத்தில் எத­னையும் குறிப்­பிட முடி­யாது. அதேபோல் 18 புதிய விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய அர­சங்கம் தீர்­மானம் எடுத்­துள்­ள­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இது­வ­ரையில் எமக்கு எந்த தக­வல்­க­ளையும் அனுப்­ப­வில்லை. தவ­றான கருத்­துக்­களை ஊட­கங்­களில் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

அதேபோல் குறிப்­பிட்ட சில நாடு­களின் பெயர்­களை சுட்­டிக்­காட்டி அந்த நாடு­களில் இருந்து விமா­னங்­களை கொள்­வ­னவு செய்­யவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. அதிலும் இன்னும் உறு­தி­யான தீர்­மானம் இல்லை. எமக்கு அனு­மதி கிடைக்கும் பட்­சத்தில் கேள்வி கோர­லுக்கு விடப்­பட்டு அதன் மூல­மா­கவே தீர்­மா­னிக்­கப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இந்­நி­லையில் இலங்­கையின் தேசிய பாது­காப்பு நிலை­மை­களின் அடிப்­ப­டையில் கடல்சார் கண்­கா­ணிப்பை மேற்­கொள்­வதற்­கான விமா­னங்கள் தற்­போது இலங்கை விமா­னப்­ப­டைக்குத் தேவைப்­ப­டு­கி­ற­தா­கவும் அதற்­கா­கவே புதிய ரக 18 விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் சில சர்­வ­தேச ஊட­கங்கள் மற்றும் இலங்­கையின் ஊட­கங்கள் கருத்­துக்­களை வெளியிட்டுள்ளன.

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளிடம் இருந்து விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. தற்போது கேள்விப்பத்திரங்களுக்கு அமைய சில நாடுகள்விமானங்களை வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com