சற்று முன்
Home / செய்திகள் / “போர்க்குற்ற விசாரணையை கூட்டமைப்பு கைவிட்டுவிட்டது” – நீலிக் கண்ணீர் வடிக்கும் சரவணபவன்

“போர்க்குற்ற விசாரணையை கூட்டமைப்பு கைவிட்டுவிட்டது” – நீலிக் கண்ணீர் வடிக்கும் சரவணபவன்

தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் கட்சியே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ச மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் தொடர்ச்சிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தியிருந்தது. இவற்றின்போதெல்லாம் தானும் பங்குபற்றியதோடு மௌமாக இருந்து தனது காரியம் சாதிக்க முயன்ற தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் குறித்த சந்திப்புக்களின் கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணையை கைவிட்டு விட்டதான நீலிக்கண்ணீர் வடிக்க ஆரம்பித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தது சட்டவிரோதமானது எனக்கூறி மகிந்தவிற்கு எதிரான பிரேரணைகளுக்கும் நீதிமன்ற மனுக்களுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரவளித்தும் கைஒப்பமிட்டும் வந்திருந்தது.

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாடுதான் என மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை உருவாக்கியது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்குவதற்கான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி கூட்டமைப்பு எம்.பிக்கள் கைஒப்பமிட்டிருந்தனர். இவை அனைத்திலும் சரவணபவனும் தனது ஆதரவு நிலைப்பாடுகளை வெளிப்படுத்திருந்தார்.

இது மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிருப்தியலைகளை உருவாக்கியது. தற்போது இவற்றிற்கு தானும் பொறுப்புக்கூறவேண்டிவர் என்பதை மறந்து குறித்த சந்திப்புக்களின் கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணையை கைவிட்டு விட்டது என நீலிக்கண்ணீர் வடிக்க ஆரம்பித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com