போர்க்குற்றவாளிகள் – வங்கதேச எதிர்க்கட்சி தலைவர்கள் இருவரிக்கு தூக்கு நிறைவேறியது

டாக்கா: போர்க்குற்றத்திற்காக வங்கதேச எதிர்க்கட்சி தலைவர்கள் 2 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர். இது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்காளதேசத்தில் கடந்த 1971–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்தர போராட்டம் நடந்தது. அதில், போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இதில், அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வங்காளதேச எதிர்க்கட்சிகளான தேசியவாத கட்சி தலைவர் கலாஹுதீன் காதிர் சவுத்ரி மற்றும் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியின் செகரட்ரி ஜெனரல் அலி அக்கான் முகமது முஜாகித் ஆகியோருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  தூக்கு தண்டனையை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவர்களின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மேலும், ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீதும், அவர்களது கருணை மனுவை நிராகரித்தார்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு 12.55 மணிக்கு டாக்கா மத்திய சிறையில் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டு உள்ளனர். தூக்கிலிடப்படுவதற்கு முன், அவர்கள் இருவரையும் அவர்களது குடும்பத்தினர் சந்தித்து பேசினார்கள். தூக்கிலிடப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின், அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பலத்த பாதுகாப்புடன் இருவரின் உடல்களும் ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இவர்கள் தூக்கிலிடப்படுவதை அறிந்ததும் இஸ்லாமிய ஜமாத்–இ–இஸ்லாமி கட்சி, நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தது. டாக்கா மத்திய சிறை முன் ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். அதனால், வங்காளசேதம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. தலைநகர் டாக்கா மற்றும் மற்றும் சிட்டகாங் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் எல்லைப் பாதுகாப்பு படை ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

1971–ம் ஆண்டுக்கு முன் வங்காளதேசம் பாகிஸ்தானின் கிழக்கு பகுதியாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திர போராட்டத்தின்போது அந்நாட்டு ராணுவத்துக்கு தற்போதைய சில எதிர்க்கட்சிகள் ஆதரவாக இருந்தன. சுதந்திர போராட்டத்தின் போது தூக்கிலிடப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் முஜாகித், சவுத்ரி ஆகியோர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கடத்தி துன்புறுத்தினர். ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தனர். பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர் போன்ற குற்றங்களுக்காக அவர்கள் தூக்கிலிடப்பட்டு உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com