போர்க்களமான தொலைக்காட்சி விவாதம் – நீங்கள் ஆயுதம் தூக்கி எல்லாரையும் சுட்டுக்கொண்ட ஆக்கள்- சுரேஸ் மீது ரிசாட் பாய்ச்சல்

Minister_Rishad_3_0ஐசே நீங்கள் நிராகரிக்கப்பட்ட ஒருவர், நீங்கள் ஆயுதம் தூக்கி எல்லாரையும் சுட்டுக்கொண்ட ஆக்கள். நீங்கள் தமிழ் மக்களுக்கு அநியாயம் செய்த ஆக்கள், பிச்சைக்காரனின் புண்ணைக் காட்டி பிச்சை எடுப்பதுபோல நீங்கள் தமிழ் மக்களின் துன்பங்களை வைத்து அரசியல் செய்யிற ஆக்கள், உங்களால தமிழ் மக்களை ஏமாத்தி அரசியல் நடத்த முடியும் முஸ்லீம்களை ஏமாற்ற முடியாது. என ஆவேசமாக சுரேஸ் பிரேமச்சந்திரனை நோக்கி கடும் வார்த்தைகளை அள்ளி வீசிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நீங்கள் செய்த அனியாங்களை மறந்துபோட்டு இப்ப வடக்கு மாகாணசபையை வச்சுக்கொண்டு நாங்கள் தான் அதிகாரத்தை எடுத்தோம் எங்களிடம் ஆணை இருக்கிறது என்று ஒரு மண்ணாங்கட்டியும் செய்யாம விட்டுப்போட்டு என்ன செல்லுறியள். பாரம்பரிய குடியேற்றம் என்றுதானே போட்டிருக்கிறார்கள் புதிய குடியேற்றங்களை அல்ல என்றார் கோபவார்த்தைகளை பொழிந்து தள்ளினார்.

வடக்கு மாகாண சபையையோ, தமிழ்ப் வடக்கைப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையோ உள்ளடக்காது அண்மையில் சிங்கள மற்றும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை உள்ளடக்கிய மீள்குடியேற்ற செயலணி ஒன்று மத்திய அரசினால் உருவாக்கப்பட்டிருந்தது.

இவ் விடையம் தொடர்பில் கடந்தவரம்  வட மாகாணத்தில் மீள்குடியேற்றும் அதிகாரம் மாகாண சபைக்கு இருப்பதாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தோடு அரசு நியமித்துள்ள செயலணிக் குழுவை நிராகரிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இவ்வி்யம் தொடர்பாக அரச தொலைக்காட்சியில் நேரடி விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விவார நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.

முன்னதாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிசாட்,

இரண்டரை வருட ஆட்சிக்காலத்தில் வடக்கு முஸ்லீம்களுக்கு ஒரு மலசலகூடத்தைக்கூட கட்டிக்கொடுக்காத விக்கினேஸ்வரன் ஐயா அரசு நியமித்துள்ள செயலணிக் குழுவை நிராகரிப்பதாக கூறுகின்றார். மீள்குடியேற்றம் மத்திய அரசு செய்கின்ற பணியாகும். அந்த மக்களிற்காக வடக்கு மாகாணசபை அதுவரை எந்த ஒரு பணியையும் செய்யவில்லை என அமைச்சர் ரிசாட் பதிதியூன் குற்றஞ்சாட்டினார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரை அந்த மக்கள் குறித்து தம்மிடம் பேச்சுவார்த்தைநடத்தக்கூட வரவில்லை. இப்போது தம்மைக்கேட்டுத்தான் மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என கூறுகிறார்கள் என்றார்.

அதற்குப் பதிலளித்துப்’பேசிய சுரேஸ் பிரேமச்சந்திரன் எடுத்த எடுப்பில் பொய்  கூறக்கூடாது ஒன்றும் நடக்கவில்லை என்று கூறக்கூடாது. முஸ்லீம் மக்களைத் துரத்தியது பிழை என்று ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது சிங்களக் குடியேற்றத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு அமைச்சரவை அணியே தவிர இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதற்காக என்று நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வடக்கு மாகாணசபை அங்கத்துவம் பெறாத இத்தகையை செயலணியை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. என்றார்.

அதன்போது சுரேஸ் பிரேமச்சந்திரனின் பேச்சினால் சினமடைந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நான் பெய் சொல்லுறன் எண்டு அவர் சொல்லுகிறார் என்ன பொய் எண்டு சொல்லவேண்டும்.  நீங்கள் கௌரவமா நடந்துகொள்ளுங்கோ என்றார்.

மீண்டும் அதற்கு பதிலளித்துப்பேச சுரேஸ் பிரேமச்சந்திரன் முற்பட்டபோது,

ஐசே நீங்கள் நிராகரிக்கப்பட்ட ஒருவர், நீங்கள் ஆயுதம் தூக்கி எல்லாரையும் சுட்டுக்கொண்ட ஆக்கள். நீங்கள் தமிழ் மக்களுக்கு அநியாயம் செய்த ஆக்கள், பிச்சைக்காரனின் புண்ணைக் காட்டி பிச்சை எடுப்பதுபோல நீங்கள் தமிழ் மக்களின் துன்பங்களை வைத்து அரசியல் செய்யிற ஆக்கள், உங்களால தமிழ் மக்களை ஏமாத்தி அரசியல் நடத்த முடியும் முஸ்லீம்களை ஏமாற்ற முடியாது என கடும்தொனியில் பேசினார்  அமைச்சர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds