போரின் பின்னரான சித்திரவதைகள் இலங்கையில் தொடர்கிறன – ஐ.நா. அதிகாரிகள்

160507135433_un_512x288_un_nocreditபோர் நடந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் செய்யப்பட்டுள்ளனர் எனவும், அது தொடர்பில் நாடு தழுவிய விசாரணை தேவைப்படுகிறது எனவும் தெரிவித்துள்ள ஐ.நாவின் இரு உயர் அதிகாரிகள்  இலங்கையில் போர் நடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது சித்திரவதைகள் குறைந்துள்ளபோதிலும் அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை அரசின் அழைப்பை ஏற்று  ஒருவார கால பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான வல்லுநர்கள் மொனிக்கா பின்டோ மற்றும் யுவான் இ மென்டிஸ், தமது பயணத்தின் முடிவில் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்தின்போதே இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.
அதன்போது கருத்துவெளியிட்ட  யுவான் இ மென்டிஸ் இது கவலையளிக்கும் ஒரு விஷயமாகவே இருக்கிறது எனவும்  சித்திரவைதைகளை முழுமையாக இல்லாதொழிக்க அரசு நடடிவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
போர் நடந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் செய்யப்பட்டுள்ளனர் எனவும், அது தொடர்பில் நாடு தழுவிய விசாரணை தேவைப்படுகிறது எனவும் யுவான் இ மென்டிஸ் கூறினார்.
நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து நாடு ஜனாநயகத்தின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றபோதிலும், இப்படியான விஷயங்கள் தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதித்துறை சிறந்த கட்டமைப்புடன் இருக்கின்றபோதிலும், அதனை மேலும் வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நீதித்துறைக்கான ஐ.நா.வின். வல்லுநர் மொனிக்கா பின்டோ தெரிவித்தார்.
கைது நடவடிக்கைகளின்போது காவல்துறையினர் சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமது விஜயம் தொடர்பில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக கூறிய மொனிக்கா பின்டோ, அந்த அறிக்கை விரையில் இலங்கை அரசிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com