சற்று முன்
Home / செய்திகள் / போராளி பிரதீபனின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி மோசடி – உடன் நிறுத்துமாறு தந்தை கடிதம்

போராளி பிரதீபனின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி மோசடி – உடன் நிறுத்துமாறு தந்தை கடிதம்

அண்மையில் புற்­று­நோ­யால் இறந்த  போராளி சந்­தி­ர­சே­க­ரம் பிர­தீ­பன் பெயரினை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளை சிலர் மேற் கொண்டு வருவதாகவும் அவர் நோயிற்றிருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தவறாக பயன்படுத்திவருவதாகவும் கவலை வெளியிட்டுள அவரது தந்தை இவ்வாறான செயலில் எவரும் ஈடுபட வேண்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போரளியின் இறப்பின் பின்பு அந்த குடும்பத்தை திரும்ப திரும்ப வேதணைப்படுத்தும் பதிவுகளையும் படங்களையும் வெளியிட்டுவரும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது அதாவது யாரிடமும் உதவிபெற விரும்பாத பிரதீபனின் பெயரில் வெளியிடப்பட்ட கடிதமும் பிரதீபனுக்கு தெரியாமல் எடுத்த படம் அவனின் இறுதிநேர வலியை தாங்கமுடியால் அவன் அவதிப்படும்போது சிறு உடையுடன் வெற்று உடலுடன் அவர் வீட்டின் பின் புறத்தில் அமைக்கப்பட்ட அந்த ஓலை குடிசையுடன் படம் எடுக்கப்பட் அதனை பயன்படுத்தி நிதி சேகரிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளமை அவரின் குடும்பத்தினரினை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த படத்தை “மக்கள் நலன் காப்பகம்” என்ற அமைப்பினரே சமூக வலைத்தளங்களில் பரவவிட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதீபனின் தந்தையால் வெளியிடப்பட்டுள்ள அகடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com