சற்று முன்
Home / செய்திகள் / போராட்டம் வெடிக்கும் – மாவையின் வெடியும் நாங்கள் படுற பாடும் – (சவாரித் தொடர் 49)

போராட்டம் வெடிக்கும் – மாவையின் வெடியும் நாங்கள் படுற பாடும் – (சவாரித் தொடர் 49)

எணை வைரவி எங்கயண உந்த ஓட்டம் ஓடுறாய். எங்கினையன் வண்டில் சவாரி நடக்கப்போகுதோ. ஆள இப்ப காணக்கிடைக்கிறேல்ல. கண்டாலும் நிண்டு கதைக்கக்கூட நேரமில்லாத ஆள் மாதிரி உந்த ஓட்டம் ஓடுறாய்.

என்ன பரமர் காத்தால பேப்பர் படிக்கேல்லயோ. படிச்சிருந்தா நீர் உப்பிடி நிண்டு கதை அளந்துகொண்டு நிண்டிருக்கமாட்டீர். நீர் இங்கிலிசுப் பேப்பறுகளப் படிக்கிறதையும் விட்டுட்டு எங்கண்ட ஊர்ப் புதினங்களையும் கொஞ்சம் படியும். நேற்றய அறிவிப்பால நாடே அல்லோல கல்லோலப்பட்டுக் கிடக்கு நீர் சும்மா விசர்க்கதை கதைச்சுக்கொண்டு….

ஏன் என்ன நடந்தது வைரவி உப்பிடி பொடிவச்சுக் கதைக்காம நேர விசயத்துக்கு வாரும்

பரமர், உவங்கள் தமிழரசுப் பொடியள் சும்மா இருக்க மாட்டாங்கள் தேவை இல்லாத வேலை ஒண்டைப் பார்த்தால நாடு இப்ப திரும்பவும் பதற்றமாக்கிடக்கு. சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் தமிழரசின்ற 16 ஆவது மாநாடு நடந்ததல்லோ.

ம்ம்

அதில மாவையை திரும்பவும் தமிழரசுத் தலைவராத் தெரிவுசெய்துபோட்டங்கள்.

ஐயோ கடவுளே… அந்தாள் தான் தான் என்ன பேசுறன் எண்டு தெரியாமல் மணிக்கணக்கா பேசுமே…. அதுவும் சரிதான் மாவையை தலையாட்டியா வச்சிருந்தாத்தானே சம்பந்தருக்கும் சுமந்திரனுக்கும் தாங்கள் நினைச்சத செய்ய முடியும். சரி நீர் விசயத்தைச் சொல்லும் வைரவி.

சனிக்கிழமை மாவையை தலைவரண்டு அறிவிச்சவங்கள். அந்தாள் ஞாயிற்றுக்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில நடந்த மாநாட்டில வச்சு மூண்டு மாதத்தில போராட்டம் வெடிக்கும் எண்டு அறிவிச்சுப் போட்டுது. அதுதான் பயமாக் கிடக்கு.

என்ன வைரவி நீரும் பகிடி பண்ணிக்கொண்டு மாவையற்ற வாயில போராட்டம் வெடிக்கும் எண்டுறதத் தவிர வேற என்ன நல்ல வார்த்தை வந்திருக்கு. நான் நினைக்கிறன் இது நூற்றி இரண்டோ நூற்றி மூண்டாவதோ போராட்ட அறிவிப்பு எண்டு. மனுசன் எங்க எல்லாம் சனக் கூட்டம் இருக்கோ அங்க உணற்சிவசப்பட்டு போராட்டம் வெடிக்கும் எண்டு அறிவிக்கிறது வழமைதானே. மயிலிட்டி கேப்பாபிலவு எண்டு நிறைய போராட்ட அறிவிப்புக்கள கடந்துதான வந்திருக்கிறம். இது என்ன புதுசா பயத்தை ஏற்படுத்துது உமக்கு.

அது இல்ல பரமர், மூண்டு மாதத்தில ரணிலின்ர அரசாங்கத்தை கவுட்டுப் போடுவன் எண்டு மகிந்தர் அறிவிச்சிருக்கிறார். மூண்டு மாதத்தில லெக்கன் அறிவிப்பும் வெளியிடப் போறாங்கள். இந்த நேரமாப் பாத்து மனுசன் போராட்டம் வெடிக்கும் எண்டு அறிவிச்சது கொஞ்சம் யோசிக்க வச்சுப்போட்டுது. தச்சுத்தவறி எங்கினயன் வெடிச்சுப்போட்டா என்ன செய்யிறது.

மாவையின் அறிவிப்பு பறவாயில்ல சம்பந்தரும் சேந்தல்லோ போராட்டம் வெடிக்கும் எண்டு அறிவிச்சிருக்கிறார். அதுவும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் எண்டு நாலு வருசமா தாங்கள் காப்பாத்தி பொத்திப் பொத்தி வளர்த்த அணிலின்ர நல்லாட்சியை பார்த்தல்லோ இனியும் பொறுக்கேலாது ஆயுதப் போராட்டம் வெடிக்கும் எண்டு அறிவிச்சுப்போட்டார்.

மாவையின்ர போராட்டம் வெடிச்சாலே நாடு தாங்காது. இதில் சம்பந்தரும் அறிவிச்சதுதான் பயமாக்கிடக்குது. எனக்கும் வயது போட்டுது ஆரேனும் பெடியளப் பிடிச்சு பதுங்கு குழிகளை வெட்டிவைப்பம் எண்டுதான் ஓடுறன்.

இதுக்கு மேலயும் உம்மோட நிண்டு கதைக்க நேரமில்ல பரமர் நான் போட்டுவாறன். பதுங்கு குழிவெட்டக்கூடிய பெடியள் ஆராச்சும் இருந்தா சொல்லும் சங்கக் கடையில அரிசி, சீனி, மா, மண்ணெண்ணை எண்டு சாமானுகளும் வாங்கி வைக்கோணும்….

நான் வாறன் பரமர் நிக்கி நேரமில்ல……….

  • வைரவி அப்பு –

பத்திரிகைத் துணுக்குகள் – நன்றி – காலைக்கதிர், உதயன், வலம்புரி, தினக்குரல்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com