போராட்டம் செய்வதை விட எல்லை தாண்டாது இருப்பதே சிறந்தது – இந்திய மீனவர்களுக்கு இலங்கை அமைச்சர் அட்வைஸ்

இலங்கை மீன்பிடி சட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாதென மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.

நாட்டின் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள் முன்னெடுக்கப்படிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் நடைமுறையிலுள்ள மீன்பிடி சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதிலும் அதற்கான அபராதத்தை அதிகரிப்பதிலும் பார்க்க இந்தியர்களின் சம்பிரதாயபூர்வமான மீன்பிடித் தொழிலை முன்னெடுப்பதற்கு எமது கடற் பிரதேசத்தில் இடமளிக்காது என்பதிலேயே இலங்கை அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, எமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக வரும் எந்தவொரு வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கும் இடமளிக்கப்போவதில்லையென்றும் அமைச்சர் உறுதியாக கூறினார்.

இலங்கை மீன்பிடி சட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் திருத்தத்துக்காக போராட்டம் நடத்துவதை விடுத்து தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லைதாண்டாது தமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதே சிறப்பானதாக அமையுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்குள் அத்துமீறும் வெளிநாட்டு மீனவர்களுக்கான அபராதத்தை இலங்கை மீன்பிடி சட்டம் மூலம் அதிகரிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி கடுமையாக எதிர்த்துள்ளதுடன் இதனை கண்டித்து இலங்கை அரசுக்கு வலியுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

சட்டவிரோதமாக அத்துமீறும் மீன்பிடி படகுகளுக்காக இதுவரை அறவிடப்பட்டு வந்த 1.5மில்லியன் ரூபா சட்டத்தில் முன்னெடுக்கப்படடுள்ள திருத்தம் மூலமாக 175 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com