சற்று முன்
Home / செய்திகள் / போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் மாவையின் உருட்டுப்பிரட்டு அம்பலம்

போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் மாவையின் உருட்டுப்பிரட்டு அம்பலம்

அரசியல் கைதிகளைச் சந்தி

த்தபோது உங்களை விடுவிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தால் வரவுசெலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம் என்றோ அதனை ஒரு ஆயுதமாக்கி அரசாங்கத்திற்கு நிபந்தனை விதிப்போம் என்றோ தான் கூறியிருக்கவில்லை என மாவை சேனாதிராஜா மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

யாழ்ப்பாணத்திலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள் நடைப்பயணமாக அனுராதபுரம் சிறைச்சாலை நேக்கி சென்றுகெண்டிருந்தனர். வெள்ளிக்கிழமை அருட்தந்தை சக்திவேல் தலைமையில் பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்திருந்தனர்.

அதன்போது அரசியல் கைதிகளை உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தக் கோருவது எனவும் அதற்கென அவர்களுக்கான வாக்குறுதிகளாக போராட்டத்தை தாங்கள் கையிலெடுப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் நாடாளுமன் உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுப்பது, அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அரசியல் கைதிகளை விடுவிக்காது விட்டால் வரவுசெலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அறிவிப்புச் செய்யவைப்பது. அதற்காக கூட்டமைப்பிற்கு அழுத்தம் கொடுக்கும்வகையில் போராட்டங்களை முன்னெடுப்பது என தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அப்படியானல் இந்தக் கோரிக்கைகளுடன் இன்றே சென்று அரசியல் கைதிகளைச் சந்தித்து போராட்டத்தை முடிவுறுத்த வலியுறுத்துவோம் என கூறினார். அதனை ஏற்க மறுத்த ஏனையவர்கள் மாணவர்கள் இத்தனை நாட்களாக நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களது உணர்வுகளை மதிக்கவேண்டும். நாங்கள் இடையில் சென்று மாணவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியதாக அமைந்துவிடக்கூடாது என கூறினர்.
அதனைடிப்படையில் மாணவர் தரப்புடன் பேசுவது எனவும் சனிக்கிழமை மாணவர்களுடன் நடைப்பயணத்தில் இணைந்து அவர்களுடன் சிறைச்சாலை சென்று போராட்டத்தை முடித்துவைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டு அங்கிருந்தே மாணவர்களுடன் பேசப்பட்டது. அவ்வாறே சனிக்கிழமை காலை சிவில் சமூகப் பிரதிநிதிகள் மாணவர்களுடன் போராட்டத்தில் இணைந்தனர்.

இதனைத் தெரிந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாவை சேனாதிராஜாவை அவசர அவசராமாக அனுராதபுரம் சிறச்சாலைக்கு அனுப்பியது. அங்கு மாவை சேனாதிராஜா உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு சில வாக்குறுதிகளை வழங்கினார். அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம் எனவும் கூறினார்.

அதனையடுத்து மாவையின் வாக்குறுதிகளையடுத்தே உண்ணாவிரதம் நிறுத்திவைக்கப்பட்டதாக ஊடகங்கள் பிரதான செய்தியாக வெளியிட்டன.

இந்நிலையில் ஆனால் பின்னர் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம் என ஒருபோதும் கூறவில்லை என மாவை சேனாதிராஜா மறுத்துள்ளார்.

இந்நிலையில் மாவை சேனாதிராஜா அரசியல் கைதிகளின் போராட்டத்தையும், மாணவர்கள், மற்றும் மக்களின் போராட்டங்களையும் மலினப்படுத்துகிறார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அனுராதபுரம் பகுதியில் இன்று காலை குறித்த நடைபவனி சென்று கொண்டிருந்த நிலையில் அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா சிறைச்சாலை அதிகாரிகளுடன் தான் பேசிவிட்டதாகவும். மாணவர்கள் சிறைச்சாலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களை உள்ளே விடுவதற்கு ஆவண செய் யப்படவேண்டும் என கூறியுள்ளதாகவும், மாணவர்களுக்கு கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவர்கள் சிறைச்சா லைக்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பெயரை குறிப்பிட்டு அவர் முன் அனுமதி பெற்றிருப்பதாக கூறியுள்ளார். ஆகவே சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கும்படி சிறைச்சாலை அதிகாரிகளிடம் கேட்டிருந்தனர். எனினும் அவ்வாறு எந்த அரசியல்வாதியும் முன் அனுமதியை பெறவில்லை. என கூறிய சிறைச்சாலை அதிகாரிகள். மனிதாபிமான அடிப்படையில் சிலரை உள்ளே விடுவதாக கூறியிருந்ததும் தெரிந்ததே.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com