சற்று முன்
Home / செய்திகள் / போதையில் வாகனம் செலுத்திய இரு பெண்கள் விபத்து – கைது செய்த பொலிசார் யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதித்தனர்

போதையில் வாகனம் செலுத்திய இரு பெண்கள் விபத்து – கைது செய்த பொலிசார் யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதித்தனர்

யாழில். மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்களை பொலிசார் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த இரு பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது இரு பெண்களும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கபட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இரு பெண்களையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com