போதையற்ற தேசம் உருவாக்க பங்காற்றும்- காரைநகர் பிரதேச செயலகத்திற்கு ஜனாதிபதி மைத்திரி மதிப்பளித்தார்

mrs-babuபோதையற்ற தேசத்தை உருவாக்குவதற்கு சிறப்பாக பங்காற்றிவருகின்ற காரைநகர் பிரதேச செயலகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட சான்றிதழ் வழங்கிக் கௌரவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (09.09.2016) யாழ்ப்பாணம் பொது நூலக மைதானத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காரைநகர் பிரதேச செயலாளர் திருமதி தேவந்தினி பாபுவிடம் இந்தச் சான்றிதழை வழங்கிக் கௌரவித்தார்.
காரைநகர் பிரதேச செயலகம் போதை ஒழிப்பு செயற்பாடுகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றது. பிரதேச செயலாளர் திருமதி தேவந்தினி பாபு தலைமையில் அனைத்து உத்தியோகத்தர்களும் இதற்காக பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
வருடா வருடம் கடைப்பிடிக்கப்படுகின்ற போதை ஒழிப்பு வாரத்தின்போதும், அதற்கு மேலதிகமாகவும் காரைநகர் பிரதேசத்தில் போதை ஒழிப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தெருவெளி ஆற்றுகைகள், விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், தனிநபர் விளக்கமளித்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் போதையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டப்படுகின்றது.
அண்மையில் காரைநகருக்கு வருகை தந்த ஜனாதிபதி செயலக அதிகாரிகளின், காரைநகர் பிரதேச செயலகம் போதையற்ற தேசத்திற்கு சிறப்பாக பங்காற்றுகின்றமையை அவதானித்ததன் அடிப்படையிலேயே ஜனாதிபதியினால் இந்த விசேட சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் சாராயக் கடைகள் இல்லை என்பதும் இவ்வாறான சாராயக்கடைகள் அமைக்க இதுவரை எவருக்கும் அனுமதிகள் வழங்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds