போதைப்பொருள் பாவனையை தடுக்க நடவடிக்கையை எடுக்குமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்து

 

“யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொலிஸாரின் அசமந்தப் போக்கால் சிறுவர்கள் முதல் பெரியோர்வரை போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. அதனைக் கட்டுப்படுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்”
இவ்வாறு வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

வடக்கு மாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.

அதன் போது , வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன், “யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. பொலிஸார் அசமந்தமாகச் செயற்பட்டு வருகின்றனர். அதனால் வடமாகாண சபை அது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதிமுக்கிய கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றைச் சபையில் கொண்டு வந்தார்.

அதனக ஆதரித்த ஆளும் கட்சி உறுப்பினர் எஸ்.சுகிர்தன் “யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை இலக்கு வைத்து மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை பரப்புகின்றார்கள். அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காது அசமந்தமாக செயற்படுகின்றார்கள்.

எனவே அவற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் பொலிஸ் அதிகாரிகளை அழைத்து பேசுவதுடன் சிறப்புப் பொலிஸ் குழுவை நியமித்து போதைப்பொருள் பாவனையை மாணவர்கள் மத்தியில் பரவவிடாது கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மற்றுமொரு ஆளும் கட்சி உறுப்பினரான இ. ஜெயசேகரம், “சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பானவர் எனும் வகையில் முதலமைச்சர், பொலிஸ் , கடற்படை மற்றும் மாகாகண சபை உறுப்பினர்களை அழைத்து சிறப்புக் கூட்டம் ஒன்றைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com