சற்று முன்
Home / செய்திகள் / போதைப்பொருள் சந்தேக நபர்கள் 37 ஆயிரம் பேர் இந்த ஆண்டில் கைது

போதைப்பொருள் சந்தேக நபர்கள் 37 ஆயிரம் பேர் இந்த ஆண்டில் கைது

இந்த ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 500 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி றுவன் குணசேகர தெரிவித்தார்.

இந்தக் காலப்பகுதியில் 430 கிலோ ஹெரோயினைப் பொலிசார் கைப்பற்றியிருந்தார்கள். ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய 37 ஆயிரத்திற்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.என்றும் அவர் கூறினார்.

இலங்கை வரலாற்றில் சிக்கிய இரண்டாவது ஆகக்கூடுதலான ஹெரோயின் தொகை நேற்று முன்தினம் பேருவளையில் கைப்பற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி றுவன் குணசேகர தெரிவித்தார்.

படகு ஒன்றில் கடத்தப்பட்ட 230 கிலோவுக்கு மேலான ஹெரோயின் இவ்வாறு கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 277 கோடி ரூபாவைத் தாண்டுகிறது. இந்த ஹெரோயின் 214 பைக்கெட்டுக்களில் பொதி செய்யப்பட்டிருந்தது. இவை பாகிஸ்தானில் பொதி செய்யப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பேருவளையைச் சேர்ந்த திலீப் சுசந்த என்பவரும் மொஹம்மத் றிஸ்வி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com