போதைக்கு எதிராகக்கூட போராடத் தயாரில்லாத யாழ்ப்பாணத்தில் 70க்கும் அதிகமான சாராயக் கடைகள் !

14206087_10154354974351327_7391344200908936469_oஅபிவிருத்திச் செயற்பாடுகளில் குறைபாடுகள் இருந்தாலோ, வேறு தேவைகள் நிறைவேற்றப்படாவிட்டாலோ வீதியில் இறங்கி போராட்டம் நடத்துக்கின்ற அரசியல்வாதிகளோ மற்றவர்களோ எவரும் சமூகத்திற்குக் கேடு விளைவிக்கின்ற தேவையற்ற போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதில்லை என யாழ்ப்பாணத்தில் கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருள் ஒழிப்புக்காகச் செயற்பட்டு வருகின்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இதற்காக போராடி வருகின்றார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

14206164_10154354972661327_2689883038055361247_o
யாழ்ப்பாணத்தில் 70-க்கும் மேற்பட்ட மதுபான விற்பனை நிலையங்கள் செயற்படுகின்றன. மது விற்பனையின் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்தே அரச திறைசேரிக்கு அதிக அளவில் பணம் வந்து சேர்கின்றது. போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையால் யாழ் மாவட்டத்தில் மிகவும் மோசமான சமூகப் பிரச்சினைகள் எழுந்திருக்கின்றன என்றார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்தே, மது விற்பனையின் மூலம் அதிக அளவு வருமானம் அரசுக்குக் கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாள்தோறும் நூறு பேர் போதைக்கு ஆளாகி மரணமடைவதாகத் தெரிவித்திருக்கிறார்.

14231786_10154354971721327_6411726587886053565_o
போதைப்பொருளில் இருந்து விடுதலைபெற்ற தேசம் என்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் எட்டாவது கட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தை மையப்படுத்தியதாக இன்று (09) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் யாழ் திறந்த விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்வில்  கலந்து கொண்டு போதையிலிருந்து விடுதலையான நாடு என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.

 

இந்த நிகழ்வில் போதைப் பொருள் ஒழிப்பிற்காகச் செயற்பட்டு வருகின்ற பொலிசார் மற்றும் சிவில் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.14195301_10154354973921327_1019568376299155058_o 14206087_10154354974146327_4790187309683329731_o

14207613_10154354971461327_3202916786714006187_o
14241431_10154354972181327_223471518490697683_o 14241680_10154354974166327_1699562055089809128_o 14242208_10154354973206327_3597249589953886247_o 14289838_10154354973116327_3810160665207368618_o 14310492_10154354971551327_5789421449390326131_o 14311227_10154354973406327_9136051872415674941_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com