போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல்

இந்திய அமைதி படையினர் யாழ். போதனா வைத்திய சாலையில் நடத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவு கூரல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி நினைவுச் சுடரை ஏற்றி வைத்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வைத்தியசாலை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுளைந்த இந்தி அமைதிப் படையினர் வைத்தியசாலையில் பணியாற்றிவர்கள்மீது கண்மூடித்தனமான துப்பாக்கிப்பிரயோகங்களை மேற்கெண்டனர். இதன்போது பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள் என பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com