சற்று முன்
Home / செய்திகள் / போதகருடன் உலாவிய இருவருக்கு அறிகுறி – நல்லூர், மானிப்பாய் பிரதேசங்களுக்கும் போதகர் சென்றதாக தகவல்

போதகருடன் உலாவிய இருவருக்கு அறிகுறி – நல்லூர், மானிப்பாய் பிரதேசங்களுக்கும் போதகர் சென்றதாக தகவல்

மத பிரச்சாரத்திற்காக சுவிசில் இருந்து அரியாலைக்கு வந்திருந்த போதகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவர் கொரோனா நோய்க்கான அறிகுறிகளுடன் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனையும் நடாத்தப்பட்டுள்ளது. எனினும் இதுவரை மருத்துவப் பரிசோதனையின் விபரங்களை வைத்தியசாலை நிர்வாகம் உறுதிப்படுத்தி வெளியிடவில்லை.

இதேவேளை மேலும் சிலர் நோய் அறிகுறிகளுடன் காணப்படுவதாகவும் அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதை வைத்தியசாலை நிர்வாகம் விரும்பவில்லை எனவும் அறிய முடிகின்றது.

இதனிடையே சுவிசில் இருந்து வருகைதந்து போதகர் அரியாலைக்கு வெளியே நாவற்குழி, யாழ்.நகர், நல்லூர் மற்றும் மானிப்பாய், சுதுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் மதப் பிரச்சாரங்களில் ஈடுபட்டதோடு யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிற்கும் சென்றுவந்ததாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த போதகரின் ஆராதனையில் பங்கேற்றவர்கள் மற்றும் அவரைச் சந்தித்தவர்கள் உடனடியாக தங்களைச் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த ஆராதனையில் கலந்துகொண்ட மக்களை யாழ்ப்பாண பிராந்திய சேவைகள் பணிமனையின் தொடர்பிலக்கத்திற்கு (0212217278) உடனடியாக தொடர்புகொண்டு தங்களது விவரங்களை தெரிவிப்பதன் மூலம் மருத்துவ அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக அவர்களது இடங்களுக்கு செல்வதன் மூலமாகவும் பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஒழுங்குகள் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான ஒழுங்குகளை செய்வது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் பிராந்தியத்திலுள்ள இதர மக்களுக்கும் தற்கால கோரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலத்தில் அவசியமானதும் பாதுகாப்பானதுமாகும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

மருத்துவ அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும் வரை தங்களை இயன்ற அளவில் பாதுகாப்பாக சுய தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தும் படியும் கோரப்பட்டுள்ளது- என்றுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com