பொலிஸ் பாதுகாப்பு தாருங்கள் – யாழ் அரசாங்க அதிபர் வேண்டுகோள்

re1-720x480

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் அத்தியட்சகருக்கு மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்திற்கும் கடமை நேரங்களில் அரச அதிபரின் அலுவலகத்திற்கும் நிரந்தரமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரியே குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடமை நேரங்களில் திடீரென ஏற்படும் அசம்பாவிதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது அரச அதிபரின் அலுவலக அறை என்பனவற்றினை முன் அறிவித்தல் இன்றி பூட்டுவதனால் சில உடையூறுகள் ஏற்படுவதாகத் தெரிவித்தே இந்தக் கோரிக்கையினை பொலிசாரிடம் கோருவதாக அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை(11) யாழில் இடம்பெறும் காணி அபகரிப்பைத் தடுக்க வேண்டும் என மாவட்ட அரச அதிபரிடம் மனு ஒன்றினைக் கையளித்த ஆர்ப்பாட்டக்கார்ர்கள் திடீரென அரச அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

தங்களுக்குரிய பதிலினை உடனடியாகப் பெற்று வழங்கவேண்டும் என கோரி அரச அதிபரின் அலுவலகத்தினை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds