பொலிஸ் திசை திருப்புகிறது – வவு­னியா மாவட்ட சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு

“யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்­கிச் சூடு தொடர்­பான விசா­ர­ணை­யில் பொலி­ஸார் காட்­டும் அவ­ச­ரம் இந்­தச் சம்­ப­வத்­தைத் திசை திருப்­பும் முயற்­சி­யா­கவே நாம் எண்­ணு­கின்­றோம். உண்­மை­யான தாக்­கு­த­லாளி சட்­டத்­தின் முன் நிறுத்­தப்­ப­ட­வேண்­டும்” இவ்வாறு வவு­னியா மாவட்ட சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கத்­தின் செய­லா­ளர் அன்­ரன் புனி­த­நா­ய­கம் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் துணிச்­ச­லா­ன­வர். எந்­த­வொரு அச்­சு­றுத்­த­லுக்­கும் அடி­ப­ணி­ய­மாட்­டார். அவ­ரால் அண்­மைக்­கா­ல­மாக நடத்­தப்­பட்ட வழக்­கு­கள் மிக­வும் பயங்­க­ர­மா­னவை.

எனவே அவரை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட இந்­தத் தாக்­கு­தல் கண்­டிக்­கத்­தக்­கது. இந்­தத் தாக்­கு­தலை மேற்­கொண்ட உண்­மை­யான தாக்­கு­த­லாளி சட்­டத்­தின் முன் நிறுத்­தப்­பட வேண்­டும். ஆனால் பொலி­ஸார் இந்த விட­யத்­தில் காட்­டும் அவ­ச­ரம் எமக்­குச் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

நீதி­பதி மீதான உண்­மை­யான இலக்கை பொலி­ஸார் திசை திருப்ப முனை­கி­றார்­கள் என்று எண்­ணத் தோன்­று­கின்­றது” என்று சட்­டத்­த­ரணி அன்­ரன் புனி­த­நா­ய­கம் மேலும் தெரி­வித்­தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com