சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / பொலிஸ் அதிகாரியை மோதி கொன்ற டிப்பர் சிக்கியது – சாரதிக்கு வலை வீச்சு!

பொலிஸ் அதிகாரியை மோதி கொன்ற டிப்பர் சிக்கியது – சாரதிக்கு வலை வீச்சு!

மாத்தறை, ஹக்மன, கொங்கல பகுதியில் பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மோதி விட்டு தப்பிச்சென்ற டிப்பர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரன்ன, கட்டக்கடுவ, கொடயிம்பரகம பகுதியில் வீடொன்று அருகில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் குறித்த டிப்பர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (13) குறித்த லொறி மோதிய சம்பவத்தில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில், அதில் 36 வயதுடைய ஒருவர் உயிரிழந்திருந்தார்.

ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும், சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்த நிலையில் குறித்த டிப்பர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எகிறும் விலைவாசி – ஒரு கிலோ பால்மா 1300 ரூபா ? 400 கிறாம் 520 ரூபா ??

நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com