பொலிஸார் வெயாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

வெயாங்கொடை மேம்பாலத்திற்கு அருகில் பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக கல்முனை விஷேட குற்றப் பிரிவு பொலிஸார் சொகுசு கார் ஒன்றை துரத்திச் சென்றுள்ளதுடன், காரை வழிமறித்து நிறுத்திய போது சந்தேகநபர் தப்பிக்க முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர் அந்த வழியால் சென்று கொண்டிருந்த ஒருவரே என்று தெரிய வந்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com