சற்று முன்
Home / செய்திகள் / பொலிஸாரின் விடுமுறைகள் யாவும் இரத்து – விடுமுறையில் உள்ளவர்களை உடன் கடமைக்கு திரும்ப அழைப்பு

பொலிஸாரின் விடுமுறைகள் யாவும் இரத்து – விடுமுறையில் உள்ளவர்களை உடன் கடமைக்கு திரும்ப அழைப்பு

அதிக மழை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை, தணியும் வரை, அனைத்து பொலிஸாரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அனர்த்தத்திற்க முகம் கொடுத்துள்ள மக்களுக்கு உதவும் வகையில், சுமார் 5,000 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொலிஸ் மாஅதிபரின் வழிகாட்டல் மற்றும் உத்தரவுக்கமைய, பொலிஸ் தலைமையத்தில், அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை மையம் ஒன்று அமைக்கப்பட்டு, அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பொலிஸ் கண்காணிப்பாளரின் (SP) கண்காணிப்பின் கீழ், குறித்த மையம் செயற்படவுள்ளதோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறும் அனர்த்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அது தொடர்பில் 24 மணி நேரமும் உதவிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் பின்வரும் தொலைபேசியின் ஊடாக பொலிஸ் அனர்த்த நடவடிக்கை மையத்தை தொடர்புகொள்ள முடியும்.

தொலைபேசி:
011 – 2430914
பெக்ஸ்:
011 – 2472757

பொலிஸ் ஊடக தகவல் மையம்:
011 – 2395605
011 – 2384024

பொலிஸ் ஊடக பேச்சாளர்:
071 – 8592604

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com