சற்று முன்
Home / செய்திகள் / பொறுமையுடன் அனைவரும் அமைதியாய் இருப்போம் – ஆதரவாளர்களுக்கு மணி வேண்டுகோள்

பொறுமையுடன் அனைவரும் அமைதியாய் இருப்போம் – ஆதரவாளர்களுக்கு மணி வேண்டுகோள்

நடப்பவை நடக்கட்டும் எல்லாவற்றையும் உன்னிப்பாக அவதானித்தவாறு அனைவரும் அமைதியாகவும் பொறுமையுடனும் இருப்போம் என சட்டத்தரணி மணிவண்ணன் தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பதவிநிலைகளிலிருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என்று செய்திகள் வெளியாகிய நிலையில் அவரது அலுவலகத்தில் பெருமளவானோர் கூடி வருகின்றனர்.

இந்நிலையிலேயே மணிவண்ணன் தனது ஆதரவாளர்களுக்கு இவ்வாறு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொக்குவில் சந்திக்கு அண்மையாகவுள்ள சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பிரேத்தியேக அலுவலகத்தில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், பொதுமக்கள் கூடி வருகின்றனர்.

அத்தோடு ஊடகவியலாளர்களும் அவரது அலுவலகத்தில் குவிந்தனர். எனினும் கட்சித் தலைமையின் உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைக்கும் வரை ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த முடியாது என்று வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பில் தமக்கு நெருக்கமானவர்களுடன் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மந்திராலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com