பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் – ஊடகங்களிற்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுரை

 izancheliyan-45447eஊடக சுதந்திரம் என்பது,  காட்டுக்குதிரைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் அல்ல இது மிகவும் பொறுப்பு வாய்ந்த பணி இதனை மனதில் வைத்து ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றச் சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தைக் கடந்துவிட்ட நிலையில் அவர்களிற்கு மேலும் விக்கமறியல் வழங்குவதா என்பது தொடர்பான வழக்கில் வைகாசி 11 ம் திகதி மன்றில் குற்றச் சந்தேக நபர்களை ஆயர்ப்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். அதுதொடர்பான வழக்கில் செய்திசேகரிப்பிற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் முன்னிலையிலேயே நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத்துறை உள்ளது. அதனால் அது பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். பொறுப்பற்ற விதத்தில் பொய்யான செய்திகளை வெளியிட கூடாது.

நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சிப்பது, பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவது , பரபரப்புக்காக தலைப்புக்களை போட்டு மக்களை அச்சத்திற்கு உள்ளாக்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

நான் கூறாத விடயங்கள் கூட மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளான. இவ்வாறான விடயங்களை தவிர்க்க வேண்டும்.

ஊடகங்கள் அதன் பொறுப்பு உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com