பொறிமுறைகளை குளிரூட்டிய அறைகளுக்குள் மட்டுப்படுத்தினால் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடாது – கருவி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர்

SAMSUNG CAMERA PICTURES

பொறிமுறைகளை குளிரூட்டிய அறைகளுக்குள் மட்டுப்படுத்தினால் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடாது அவை மக்கள் மயப்பட்டதாக கிராமிய மட்டத்தில் விரிவுபடுத்தப்படவேண்டும்   என தெரிவித்துள்ள கருவி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுகைளைக்கூட அரசு எழுத்துவடிவில் மாத்திரமே வைத்திருப்பதாகவும் அவை செயல் வடிவத்தில் இல்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வடக்கின் நான்கு மாவட்டங்களில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்றுவருகின்றன அவற்றில் பங்கேற்று மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நல்லூர் பிரதேச செலர் பிரிவிற்குட்பட்ட மக்களும் ஏனைய அமர்வுகளில் சாட்சியமளிக்காதவர்களும் பங்குகொள்ளும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற (06) மக்கள் கருத்தறியும் அமர்வில் பங்கேற்று சாட்சிமளிக்கும் போதே கருவி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.

அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் போராளிகளிற்கு புனர்வாழ்வு வழங்கியிருந்தபோதிலும் அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான வெளியினை அரசு உருவாக்கவில்லை. அரசினால் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் பொலிஸ் அத்தாட்சிப் பத்திரம் ஒன்றினைப் பெறுவதற்குக்கூட முடியாத சூழல் நிலவுவதாகவும் அத்தாட்சிப் பத்திரம் பெறச் செல்லும் மாற்றுத்திறனாளிகளிடம் பொலிசார் விமானக் குண்டுவீச்சில் உங்களிற்கு பாதிப்பு எற்படவில்லை மிதிவெடியில் சிக்கியதாக என்றால் எழுதித்தருகின்றோம் என்றெல்லாம் திசைதிருப்புகின்றனர். யுத்தத்தால் பாதிப்புகளிற்கு உள்ளான மாற்றுத்திறனாளிகளிற்கு துவிச்சக்கரவண்டிவ் போன்ற சாதனங்களை மட்டும் வழங்கினால் அவர்களின் பொருளாதராத்தை கட்டிஎழுப்ப முடியாது. அவர்களின் அடிப்படைப் பொருளாதாரம் கட்டிஎழுப்பப்படவேண்டும்.SAMSUNG CAMERA PICTURES

வெளிநாடுகளில் அவற்றிற்கான பெறிமுறைகள் இருக்கின்றன. மற்றுத்திறனாளிகளை வெளிநாடுகளில் நடாத்துகின்ற முறையே வேறுவிதமானது. இங்கு செயற்படுத்தும் பொறிமுறைகளை குளிரூட்டிய அறைகளுக்குள் மட்டுப்படுத்தினால் இது போதுமானதாக இருக்காது. கிராமிய மட்டத்தில் விரிவுபடுத்தப்படவேண்டும். இலகுவில் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடியவர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக கிராமிய மட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிற்கான பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.

சாட்சியமளிற்கும் விடையங்களில் பெரும்பான்மையினத்தவர்களை அதிகாரிகளாக்கும் சந்தர்ப்பங்களில் முழுமையாக உண்மையான விடையங்களை சாட்சியமளிக்க எம் மக்கள் முன்வரமாட்டார்கள். இதில் ஒன்று அச்சம் சார்ந்த விடையம் மற்றையது. மனோநிலை சம்பந்தப்பட்டது.

அரசிற்கான பரிந்துரைகளில் மாற்றுத்திறனாளிகளிற்கான அரச நியமனங்கள், பொருளாதார மேம்பாட்டிற்கான அடிப்படைக்கட்டமைப்பைப் பலப்படுத்திவிடுதல் போன்றவற்றைச் செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com