சற்று முன்
Home / செய்திகள் / பொருத்து வீடு இல்லை – வடக்கு-கிழக்கிற்கு 50 ஆயிரம் நிரந்தர வீடு – அமைச்சரவை தீர்மானம் !!

பொருத்து வீடு இல்லை – வடக்கு-கிழக்கிற்கு 50 ஆயிரம் நிரந்தர வீடு – அமைச்சரவை தீர்மானம் !!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செங்கல் மற்றும் சீமெந்து உடனான பாரம்பரிய நிலையான வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தையே முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்பொருட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் மோதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செங்கல் மற்றும் சீமெந்துடனான 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தக்காரர்களிடம் கேள்விமனு கோரப்பட்டுள்ளது. இதில் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விமனுக்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான வீடமைப்பு வேலைத்திட்டம் ,ஐக்கியநாடுகள் சபையின் திட்டம் தொடர்பான அலுவலகம் , இலங்கையில் மனித நேயத்திற்கான நிழல் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் ஆகியவற்றினால் முன்னெடுக்கப்படும் இலாபத்தை இலக்காக கொள்ளாத மனிதநேய அமைப்பு சமர்ப்பிக்கப்பட்ட வீடமைப்பு நிர்மாணத்துறையில் 3 மாற்று ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன் இவை தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டு குழுவின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக முதற்கட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான 25 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு இந்த அமைப்புக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முன்னதாக வடக்கு கிழக்கிகு மக்களுக்கு பொருத்து வீடு அமைத்துக் கொடுப்பது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் கடுமையான முனைப்புக்களில் ஈடுபட்டுவந்திருந்தமையால் மக்களுக்காக குறித்த வீடுகளை அமைத்துக்கொடுப்பதில் முடிவெடுப்பதற்கு நீண்டகால இழுத்தடிப்பு நிலை காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com