சற்று முன்
Home / செய்திகள் / பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் தொடர்ச்சியான மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று (29) முற்பகல் 10 மணிக்கு போராட்டம் நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் நடத்தப்பட இப் போராட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க மட்டுமல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டது.

நேற்று முற்பகல் 10 மணியளவில் யாழ்.பஸ் நிலையம் முன்பாக ஒன்று கூடியவர்கள் “விலை உயர்வும் வரிச் சுமையும் உழைக்கும் மக்களின் தலைகளிலா” என்று தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக பஸ் நிலையம் முன்பாக ஆஸ்பத்திரி வீதியோராமாக நின்று விலை உயர்வினை எதிர்க்கும் வகையில் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் “ ஊழலும், மோசடியும் அரசின் கைகளில், கடன்களும், வரிகளும் மக்களின் தலையில், அரிசி விலை ஆணை விலை, சீனி விலை குதிரை விலை, தேங்காய் விலை வயிற்றில் அடிக்குது, பெற்றோல் விலை பற்றி எரியுது, காஸ் விலை உச்சிக்குப் போகுது, ஏழையின் அடுப்பில் புனை துங்குது” என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதைவிட நாட்டின் எதிர்க் கட்சி தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அரசாங்கத்தின் பங்காளிகள் என்றும், மக்கள் விலை உயர்வினால் கஸ்ரங்களை எதிர்கொள்ள அவர்கள் சுகபோகங்களை அனுபவிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோசங்கள் ஊடாக குற்றம் சுமத்தியிருந்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com