பொன்னாலை வரதராஜப் பெருமாள் இரதோற்சவம் வியாழக்கிழமை

ponnalai 7899eவரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய ஆவணி இரதோற்சவம் வியாழக்கிழமை (25.08.2016) பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதிகாலை 5.30 மணிக்கு 108 கலச அபிசேகம், விசேட பூசை, கொடிக்கம்ப பூசையைத் தொடர்ந்து முற்பகல் 10.30 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத வரதராஜப் பெருமாள் உள்வீதி வலம் வந்து நண்பகல் 12 மணிக்கு தேரில் ஆரோகணிப்பார்.
இரதோற்சவம் முடிவடைந்த பின்னர் பகல் 1.30 மணிக்கு உறியடி உற்சவம் இடம்பெறும். பிற்பகல் 2 மணிக்கு பச்சை சாத்தப்பட்டு சுவாமி தேரில் இருந்து அவரோகணிப்பார்.
இந்த வருடம் இரதோற்சவத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் ஏராளமாக பக்தர்கள் ஒன்றுகூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பக்தர்களின் வசதி கருதி யாழ். – காரைநகர் சேவையில் ஈடுபடும் 782,785,786 வழி இலக்க அரச, தனியார் பேருந்துகள் ஆலயம் வரை சேவையில் ஈடுபடவுள்ளன.
ஆலயத்திற்கு அண்மையிலுள்ள மடாலயங்களிலும் பொன்னாலைச் சந்தியில் உள்ள மடாலயத்திலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாகசாந்தி நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
ஆலயத்தில் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்த்துக்கொள்வதற்காக பக்தர்கள் தமது துவிச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் வாகன பாதுகாப்பு நிலையங்களில் நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சன நெருக்கடியைப் பயன்படுத்தி திருடர்கள் கைவரிசையைக் காட்டக்கூடும் என்பதால் பக்தர்கள் விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் அணிந்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆலய வளாகத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் 24 மணிநேரமும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com