பொன்சேகாவின் மீது போர்குற்றம் இல்லையா?

பிரேசில் நாட்டின் தூதுவராக இருந்த ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்கை தாக்கல் செய்ய முடியுமானால், ஏன் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மீது வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்று பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள முன்னாள் படைவீரர்களின் சம்மேளனத்தின் அமைப்பாளர் அஜித் பிரசன்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெகத் ஜெயசூரிய அதிகாரியாக இருந்தபோது சரத் பொன்சேகாவே இராணுவ தளபதியாக இருந்தார். எனினும் அமெரிக்காவின் அனுசரணை அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் காரணமாகவே சரத் பொன்சேகாவின் மீது வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று அஜித் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் புலம்பெயர்வாளர்களின் இந்தக் குற்றச்சாட்டை கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ள அஜித் பிரசன்ன, இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, கடற்படை தளபதிட்ராவிஸ் சின்னையா ஆகியோர் உரிய நடைமுறைகளின் கீழ் நியமிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com