பொன்காந்தனுக்கு அடைக்கலநாதன் அடைக்கலம்

PON KANTHAN_CIதமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட துணைத்தலைவர் பொன் காந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடனான முரண்பாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில் தமிழரசுக் கட்சியின் பங்களிக் கட்சியான ரெலோ அமைப்பின் தலைவர்களுள் ஒருவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின்  பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனினால்  கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராக  இன்று புதன்கிழமை (27) நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு கிளிநொச்சியில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் செல்வம் அடைக்கலநாதனால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன் கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு கிளிநொச்சிக்கு வருகை தந்த பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கிளிநகரில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டார். இதன்போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com