சற்று முன்
Home / செய்திகள் / பொது வேட்பாளராக களமிறங்க தயாரா?

பொது வேட்பாளராக களமிறங்க தயாரா?

ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளை ஓரணியில் திரட்டி, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று வடக்கு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரனை சந்தித்தனர்.

நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தனர். அவர்களை பொதுவேட்பாளராக களமிறங்கும்படி, சிவில் பிரதிநிதிகள் கோரியபோதும், அதை அவர்கள் ஏற்கவில்லை.

இந்தநிலையில், இன்று காலையில் நல்லூரிலுள்ள விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று அவரை சந்தித்து சிவில் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். விக்னேஸ்வரனை பொதுவேட்பாளராக களமிறங்கும்படி சிவில் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை விக்னேஸ்வரன் மறுத்து விட்டார். எனினும், கட்சி சார்பில்லாத பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, கட்சி சார்பற்ற பொதுவேட்பாளரை அடையாளம் காணும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com