பொகவந்தலாவ ஆல்டி தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ ஆல்டி தமிழ் வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் திரு.கஜேந்திரன் தலைமையில் திங்கட்கிழமை 25 ம் திகதி இடம்பெற்றது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக பிரிடோ நிறுவன வெளிகள இணைப்பாளர் எஸ். கே. சந்திரசேகரன் மற்றும் இப்பிரதேச பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

இதன் போது மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இவ்வருடம் பாடசாலையில் நடைப்பெற்ற பாடவிதமான போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு வெற்றிகேடயங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரிடோ நிறுவன வெளிகள இணைப்பாளர் அவர்களின் சமூகசேவைகளை பாராட்டி பாடசாலை அதிபர் அவர்களால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.DSC00848 DSC00853 DSC00856 DSC00873 DSC00876 DSC00889 DSC00910 DSC00915 DSC00945 DSC00950

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com